← முகப்பு இன்றைய ராசிபலன்

Trigrahi Yog In Gemini On 15 June 2026: ஜூன் 15 ஆம் தேதி

🕐 4 மணி நேரம் முன்னர் 📂 இன்றைய ராசிபலன் 12 பார்வைகள்
Trigrahi Yog In Gemini On 15 June 2026: ஜூன் 15 ஆம் தேதி

Trigrahi Yog In Gemini On 15 June 2026: ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் ராசி மாற்றங்கள் மனித வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் அந்த கிரகங்களின் சேர்க்கைகளால் உருவாகும் யோகங்கள் இன்னும் சிறப்பான தாக்கத்தை உண்டாக்கும். அந்த வகையில் கிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார்.

அப்படி ஜூன் 15 ஆம் தேதி சூரியன் மிதுன ராசிக்குள் நுழைகிறார். இந்த மிதுன ராசியின் அதிபதி புதன். ஏற்கனவே இந்த மிதுன ராசியில் புதன் பயணித்து வருகிறார். இந்நிலையில் மனதின் காரணியாக கருதப்படும் சந்திரனும் மிதுன ராசியில் உள்ளார். இதனால் மிதுனத்தில் சூரியன், சந்திரன் மற்றும் புதனின் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகிறது.

இந்த யோகமானது மிகவும் மங்களகரமான யோகம் மற்றும் இது ஜூன் 17 ஆம் தேதி வரை நீடித்திருக்கவுள்ளது. இந்த யோகத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், 4 ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் நல்ல நிதி ஆதாயங்களையும், தொழிலில் முன்னேற்றங்களையும் பெறவுள்ளனர். இப்போது ஜூன் 15-ல் உருவாகும் திரிகிரக யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

Trigrahi Yog In Gemini On 15 June 2026 List Of Lucky Zodiac Signs

மிதுனம்

மிதுன ராசியின் முதல் வீட்டில் சூரியன், சந்திரன் மற்றும் புதனின் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் அதிகபட்ச நன்மைகளைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புக்களை வழங்கப்படும். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். பல புதிய வழிகளில் இருந்து பணம் தேடி வரும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் மற்றும் புதிய முதலீடுகளை செய்ய இக்காலம் உகந்ததாக இருக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உங்களின் பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையி இருக்கும்.

Trigrahi Yog In Gemini On 15 June 2026 List Of Lucky Zodiac Signs

சிம்மம்

சிம்ம ராசியின் 11 ஆவது வீட்டில் சூரியன், சந்திரன் மற்றும் புதனின் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வருமானத்தில் எதிர்பாராத அதிகரிப்பை காண்பார்கள். நீண்ட கால பண பிரச்சனைகள் தீரும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் மற்றும் உறவினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். நீண்ட கால ஆசைகள் நிறைவேறும்.

Trigrahi Yog In Gemini On 15 June 2026 List Of Lucky Zodiac Signs

கன்னி

கன்னி ராசியின் 10 ஆவது வீட்டில் சூரியன், சந்திரன் மற்றும் புதனின் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. பணியிடத்தில் உங்களின் செயல்திறன் பாராட்டப்படும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். பரம்பரை சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகள் இக்காலத்தில் முடிவுக்கு வரும். பண வரவு அதிகரிக்கும்.

Trigrahi Yog In Gemini On 15 June 2026 List Of Lucky Zodiac Signs

துலாம்

துலாம் ராசியின் 9 ஆவது வீட்டில் சூரியன், சந்திரன் மற்றும் புதனின் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புக்கள் கிடைக்கும். மேலும் வேலை தொடர்பான பயணங்களும் நல்ல நிதி ஆதாயங்களைத் தரும். மாணவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். போட்டி தேர்வுகளில் நல்ல வெற்றியைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net