ஜோதிடத்தின் படி ஒவ்வொரு ராசிக்காரர்களும் தனித்துவமான குணாதிசயங்களைக் கொண்டிருப்பார்கள். இதற்கு அந்த ராசியை ஆளும் அதிபதிகள் தான் காரணம். சொல்லப்போனால் இந்த அதிபதிகளின் காரணமாகவே சில ராசிக்காரர்கள் தங்களின் இளம் வயதிலேயே தங்கள் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைகிறார்கள். முக்கியமாக அந்த ராசிக்காரர்கள் அதிக தன்னம்பிக்கை கொண்டவர்களாக, விடாமுயற்சி மற்றும் போராட்ட குணத்தை கொண்டவர்களாக உள்ளார்கள்.
இப்படியான குணாதிசயங்கள் தான் இவர்கள் இளம் வயதில் சாதனை படைக்க முக்கிய காரணங்களாக உள்ளன. அப்படி 30 வயதிற்குள்ளேயே சமூகத்தில் புகழ்பெற்று, வாழ்க்கையில் நல்ல உயரத்தை அடையக்கூடிய 5 ராசிக்காரர்கள் உள்ளனர். அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதை இப்போது காண்போம். உங்கள் ராசியும் இதில் உள்ளதா என்பதை பாருங்கள்.

மேஷம்
மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் பிறவிலேயே தலைமைத்துவ குணங்களைக் கொண்டிருப்பார்கள். எதிலும் முதன்மையாக இருக்க வேண்டுமென்று நினைப்பார்கள் மற்றும் அதற்கேற்ப செயல்படவும் செய்வார்கள். இவர்கள் தோல்வியால் துவண்டு போகாமல், அதை வெற்றிக்கான ஒரு படிக்கட்டாக நினைத்து தொடர்ந்து முயற்சிப்பார்கள். எவ்வளவு தடைகளை சந்தித்தாலும், அதை மன வலிமையால் உடைத்து முன்னேறுவார்கள். முக்கியமாக இந்த ராசிக்காரர்கள் 20-30 வயதிற்குள் தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள். முக்கியமாக இவர்கள் தாங்கள் இருக்கும் இடத்தில் தங்களின் திறமையால் ஒரு தனி இடத்தை உருவாக்குவார்கள்.

சிம்மம்
சிம்ம ராசியின் அதிபதி சூரியன். இந்த ராசிக்காரர்கள் மிகவும் தைரியமானவர்கள். தனது கனவை நிறைவேற்ற கடினமாக உழைக்கக்கூடியவர்கள். அதிக செல்வாக்கு கொண்டவர்களாக இருப்பார்கள். தலைமைப் பொறுப்புகள், அரசியல், ஊடகம் போன்ற துறைகளில் சிறந்து விளங்குவார்கள். இளமையிலேயே தங்களின் திறமையை வெளிப்படுத்தி பலரது கவனத்தை ஈர்ப்பார்கள். தோல்வியால் ஒருபோதும் உடையமாட்டார்க. மாறாக அது அவர்களை வலிமையாக்கவே செய்யும். மொத்தத்தில் சிறு வயதிலேயே வாழ்வில் நல்ல உயரத்தை அடைவார்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய். இந்த விருச்சிக ராசியின் பலமே அவர்களின் தைரியமும், மன உறுதியும் தான். இவர்கள் ஒன்றைய அடைய முடிவெடுத்துவிட்டால், அதை பெறும் வரை ஓயமாட்டார்கள். இவர்கள் பார்க்க அமைதியானவராக தெரிந்தாலும், மனதில் பெரிய கனவுகளையும், இலக்குகளையும் வைத்திருப்பார்கள். எப்பேற்பட்ட கடினமான சூழ்நிலைகளிலும் தைரியமாக முடிவெடுக்கும் திறன் இருக்கும். பலர் முடியாது என்று நினைத்து கைவிடும் பல விஷயங்களைப் பெற தொடர்ந்து முயற்சித்து, வெற்றி பெறுவார்கள். இப்படியான குணங்களால் 30 வயதிற்குள்ளேயே தொழிலில் நல்ல வளர்ச்சியை காண்பதோடு, சாதனைகளையும் படைப்பார்கள்.

மகரம்
மகர ராசியின் அதிபதி சனி பகவான். இந்த ராசிக்காரர்கள் கடினமாக உழைக்கக்கூடியவர்கள். எதையும் பொறுமையாகவும், திட்டமிட்டு செயல்பட்டும் முன்னேறுவார்கள். அகலக்கால் வைக்காமல், படிப்படியாக முயற்சித்து உயரத்தை அடைவார்கள். இவர்கள் அரசு வேலை, தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழில்முனைவு துறைகளில் சிறப்பான வளர்ச்சியை காண்பார்கள். இளமையிலேயே பொறுப்புக்களை ஏற்று செயல்படுவதால் மற்றவர்களை விட வேகமாக வாழ்வில் முன்னேற்றத்தை காண்பார்கள்.

கும்பம்
கும்ப ராசியின் அதிபதி சனி பகவான். இந்த ராசிக்காரர்கள் புதுமையான சிந்தனை மற்றும் தனித்துவமான அணுகுமுறைக்கு பெயர் பெற்றவர்கள். வித்தியாசமான வழிகளில் வாய்ப்புக்களை உருவாக்கும் திறனைக் கொண்டவர்கள். ஐடி, டிஜிட்டல் துறை, ஆராய்ச்சி, படைப்பாற்றல் தொடர்பான வேலைகளில் நல்ல வெற்றியைக் காண்பார்கள். ஒரு பிரச்சனைக்கு திறம்பட யோசித்து தீர்வு காணும் திறமையைக் கொண்டவர்கள். ரிஸ்க் எடுக்க தயங்காதவர்கள் என்பதால், இவர்கள் 30 வயதிற்குள்ளேயே வாழ்வில் நல்ல நிலையை அடைவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.