ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் இயக்கங்கள் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஜூன் 15 அன்று கிரகங்களின் ராஜாவான சூரியன் ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு இடம்பெயரும், ஒரு முக்கியமான கிரக மாற்றம் நிகழவுள்ளது. இந்த இடப்பெயர்ச்சியின் மூலம் குருபகவானுக்கும், சூரியனுக்கும் இடையே ‘த்வித்வாதச யோகம்’ உருவாகிறது; இந்த யோகத்தின் தாக்கம் ஜூலை பாதி வரை, அதாவது சுமார் 30 நாட்களுக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, குருவும் சூரியனும் நட்பு ரீதியான உறவைக் கொண்டவை. எனவே இந்த கிரகங்களுக்கும் இடையே உருவாகும் இந்த ‘த்வித்வாதச யோகம்’ சில ராசிக்காரர்களுக்குச் சாதகமானதாகக் கருதப்படுகிறது. இந்த காலகட்டத்தில் சில ராசிக்காரர்களுக்கு தொழில், நிதிநிலை, கல்வி மற்றும் தனிப்பட்ட உறவுகள் போன்ற துறைகளில் சாதகமான பலன்கள் கிடைக்கக்கூடும். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
'த்வித்வாதஷ் யோகம்' மேஷ ராசிக்காரர்களுக்கு நேர்மறையான மாற்றங்களை கொண்டுவரக்கூடும். அவர்கள் தொழில் வாழ்க்கையில் இதுவரை சந்தித்து வந்த தடைகள் இப்போது முடிவுக்கு வரும். ஜூன் 15 முதல் ஜூலை 15 வரையிலான காலகட்டத்தில், பதவி உயர்வு மற்றும் தொழில் வளர்ச்சியுடன் தொடர்புடைய வாய்ப்புகளும் கிடைக்கலாம். இந்த கிரக மாற்றத்தால் அவர்களின் பொருளாதாரநிலை கடந்த காலத்தை விட மிகவும் சிறப்பாக இருக்கும். அவர்கள் விரும்பும் பல விஷயங்களை இப்போது அடைய முடியும்.
திருமணமான தம்பதிகளிடையே நெருக்கமும், ஒற்றுமையும் அதிகரிக்கும். வீட்டிற்காக சில ஆடம்பர பொருட்களை வாங்கலாம். வேலை தேடுபவர்களுக்கு சிறப்பான வேலை வாய்ப்புகள் கிடைக்கும். புதிய திட்டங்களில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது. அலுவலகத்தில் அவர்களின் செயல்திறன் அதிகரிப்பதால், பல்வேறு சாதனைகளும், அங்கீகாரமும் தேடிவரும். குடும்பத்தினரின் முழு ஆதரவும் அவர்களுக்குக் கிடைக்கும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு சூரியனால் உருவாகும் இந்த யோகம் நேரடியான பலன்களை தரப்போகிறது. இந்த யோகத்தால் அவர்களின் நிதிநிலை முன்னேற்றமடையப் போகிறது. அவர்களின் வாழ்க்கையில் இதுவரை இருந்து வந்த கஷ்டங்கள் நீங்கும். அவர்களின் அனைத்து முயற்சிகளுக்கும் அதிர்ஷ்டம் துணை நிற்கும். அவர்களுக்கு வியாபாரத்தின் மூலம் நிறைய பணம் சம்பாதிக்க வாய்ப்பு கிடைக்கும். இந்த கிரக மாற்றம் அவர்கள் புதிய முயற்சிகளைத் தொடங்கவும் உதவும்.
தற்போது வேலையில் இருப்பவர்கள் அலுவலகத்தில் சிறப்பான நன்மைகளை அடைய முடியும். வெளிநாடு சென்று வேலை செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். செவ்வாய் துலாம் ராசியில் பிரவேசிக்கும் நேரத்திலிருந்து வாழ்க்கையில் பல நல்ல விஷயங்கள் நடக்கும். அவர்களின் குடும்ப வாழ்க்கையில் நிலவி வந்த சிக்கல்கள் முடிவுக்கு வரும்.
மீனம்
மீன ராசிக்கு அதிபதியான குருபகவானுக்கும் சூரியனுக்கும் இடையே 'த்வித்வாதச யோகம்' உருவாவதால், இந்த காலகட்டத்தில் மீன ராசிக்காரர்கள் மிகுந்த ஆற்றலுடனும் உற்சாகத்துடனும் காணப்படலாம். இந்த காலகட்டத்தில் மீன ராசிக்காரர்கள் வாழ்க்கையில் நேர்மறையான பலன்கள் உருவாகப்போகிறது. எனவே இந்த காலகட்டத்தில் அவர்கள் வேலை மற்றும் தொழிலில் பெரிய வெற்றியைப் பெறலாம். அவர்களின் பொருளாதார நிலை மேம்படலாம் மற்றும் வேலையில்லாதவர்கள் விரும்பிய வேலைகளை எதிர்பார்க்கலாம்.
அதே நேரத்தில், வணிகர்கள் பல்வேறுபுதிய தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கு இது சரியான காலகட்டமாக இருக்கும். வேலையில் இருப்பவர்கள் புதிய வேலையில் சேர விரும்பினால், எந்த பிரச்சனையும் இல்லாமல் புதிய வேலையில் சேரலாம். இந்த காலகட்டத்தில் உங்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.