Aani Matha Rasipalan 2026: சூரியன் மிதுன ராசியில் சஞ்சரிக்கும் மாதம் ஆனி மாதம். இது தமிழ் மாதங்களில் சித்திரை வருடப்பிறப்பு தொடங்கி வரும் மூன்றாவது மாதமாகும். மிதுன ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் இது மிதுன மாதம் என்றும் அழைக்கலாம். சூரியனின் வடதிசைப் பயணக் காலம் ஆன உத்திராயணத்தின் கடைசி மாதமாக வருவது ஆனி. அதாவது, தேவர்களுக்கு உரிய பகல் பொழுதின் இறுதிப் பகுதி.
தேவர்களின் மாலை நேரப் பொழுதே மானிடர்கள் ஆகிய நமக்கு ஆனி மாதக் காலம். இந்த மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரம், கூட்டணியைப் பொறுத்து மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப்போகிறது என்று ஜோதிடர் ஜெயலட்சுமி அவர்கள் தமிழ் போல்ட்ஸ்கையுடன் பகிர்ந்து கொண்டார். உங்கள் ராசிக்கு ஆனி மாதம் எப்படி இருக்கும் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
மேஷம்
சூரியன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் வெளியூருக்கு செல்லும் நிலை உண்டாகும் வியாபாரம் விருத்தியாகும். உங்களின் பண பிரச்சினை தீரும். அப்பாவின் உடல் நலனில் அக்கறை தேவை. அரசியல், அரசாங்க வேலையில் இருப்பவர்களுக்கு பிரச்சினை ஏற்படும். இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியான மாற்றம். ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும்.
சுப காரிய பேச்சுவார்த்தைகள் தொடங்கலாம். வியாபாரிகள் முன்னெச்சரிக்கையோடும் விழிப்புணர்வோடும் இருந்தால் லாபம் கிடைக்கும். பண வருமானம் வந்தாலும் சுப விரைய செலவுகளும் ஏற்படும் மாதம். திங்கட்கிழமை சிவ ஆலயம் சென்று பால் அபிஷேகம் செய்து வழிபட நன்மைகள் நடைபெறும்.

ரிஷபம்
சூரியன் இரண்டாமிடத்தில் பயணம் செய்வதால் பேச்சில் அதிகாரம் அதிகரிக்கும். கவனமாக பேசாவிட்டால் குடும்பத்தில் சிக்கல்கள் வரலாம் கவனம் தேவை. குரு உடன் ராசிநாதன் சுக்கிரன் பயணம் செய்வதால் பொருளாதார நிலைமை திருப்திகரமாக இருக்கும்.
அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். என்றாலும் அதற்கேற்ப ஆதாயமும் கிடைக்கும் என்பதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். இல்லத்தரசிகளுக்கு வீட்டிற்குத் தேவையான பணம் கிடைக்கும் என்பதால் பிரச்னை இருக்காது. வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். ஆடை ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். வெள்ளிக்கிழமை அம்மனுக்கு பாயாசம் நைவேத்தியம் செய்து வழிபடலாம்.
மிதுனம்
உங்க தைரிய ஸ்தானதிபதி சூரியன் உங்க ராசியில் சஞ்சரிப்பதால் வளர்ச்சியும் வெற்றியும் வரப்போகிற மாதம். சூரியன் உங்கள் ஜென்ம ராசியில் பயணிப்பதால் தலைமைப் பதவி கிடைக்கும் அப்பாவின் உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பண வரவுகள் சராசரியாக இருக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.
வேலைக்கு செல்பவர்களுக்கு அலுவலகத்தில் பணிச் சுமை கூடும். உடல் அசதியும், மனதில் சோர்வும் உண்டாகும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம் கவனமாக இருக்கவும். புதன்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு சென்று துளசி மாலை சாற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.

கடகம்
உங்க தன ஸ்தானாதிபதி சூரியன் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் பயணம் செய்வதால் அரசு நிறுவனங்களில் முதலீடுகள் அதிகரிக்கும் வெளிநாடு தொழில் தொடர்புகள் மூலம் பணவரவு அதிகரிக்கும். பண வரவு திருப்தி தருவதாக இருக்கும். வீண் விரைய செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.
வேலைக்குச் செல்பவர்களுக்கு நல்ல மாதம். புதிய வாய்ப்புகள் தேடி வரும். இந்த மாதம் பணம் கடன் வாங்குவதையோ கொடுப்பதையோ தவிர்ப்பது நல்லது. இல்லத்தரசிகளுக்கு இது மகிழ்ச்சியான மாதம் என்றாலும் அவ்வப்போது சோர்வும் களைப்பும் ஏற்படும். உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். பெருமாள் கோவிலுக்கு சென்று துளசி மாலை சாற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.
சிம்மம்
உங்க ராசி நாதன் சூரியன் லாப ஸ்தானத்தில் பயணம் செய்வது சிறப்பு. வரவே வராது என்று நினைத்த பணம் உங்களை தேடி வரும். திடீர் பண வரவினால் திக்கு முக்காடி போவீர்கள். சுப காரியங்கள் தொடர்பாக பேசலாம். கணவன் மனைவி இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.
அலுவலகத்தில் உங்களின் செல்வாக்கும் சொல்வாக்கும் அதிகரிக்கும். பெண்களுக்கு வீட்டிலும் வெளியிலும் சலுகைகள் கிடைக்கும். வேலை விசயமாக செல்லும் பயணங்களால் நன்மைகள் நடைபெறும். அஷ்டம சனி காலம் என்பதால் பண விசயங்களில் கவனம் தேவை. உணவு விசயத்திலும் உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துங்கள். அனுமனுக்கு சனிக்கிழமை விளக்கேற்றி வழிபடுங்கள்.

கன்னி
உங்க ராசிக்கு தொழில் ஸ்தானமான பத்தாவது வீட்டில் சூரியன் சஞ்சரிக்கிறார். பத்தில் சூரியன் பதவி உயர்வை கொடுப்பார். நினைத்த காரியம் நிறைவேறும். அலுவலகத்தில் உங்களின் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.
உடல் ஆரோக்கியத்தில் சில பிரச்சினைகள் வந்து மருத்துவ செலவுகள் ஏற்படலாம். பெண்களுக்கு வீட்டில் மதிப்பு மரியாதை கூடும். அலுவலகத்தில் பெண்களுக்கு எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். அமாவாசை, பவுர்ணமி நாட்களில் குல தெய்வ வழிபாடு செய்யுங்கள் பாதிப்புகள் நீங்கி நன்மை நடைபெறும்.
துலாம்
சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட உங்களுக்கு ஆனி மாதம் அதிர்ஷ்டங்கள் தேடி வரும். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். வீட்டிற்கு உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.
பணம் எவ்வளவு வந்தாலும் அதற்கேற்ப செலவுகள் உங்களை தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். நேரங்கெட்ட நேரத்தில் சாப்பிடாமல் சத்தான உணவுகளை சாப்பிடுங்கள். செவ்வாய்கிழமை ராகு காலத்தில் துர்க்கையை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

விருச்சிகம்
சூரியன் உங்களுடைய ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்வதால் இரவு நேரங்களில் வண்டி வாகனங்களில் போகும் போது கவனமாக இருக்கவும். பண விவகாரங்களில் எச்சரிக்கை தேவை. பண வரவு அதிகரிக்கும் கூடவே சுப செலவுகளும் வரும். சில பிரச்சினைகளால் பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேரும் நேரம் வந்து விட்டது.
கணவன் மனைவி இடையே ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் தீரும். தம்பதியர் இடையே நெருக்கம் அதிகரிக்கும். சிலருக்கு புத்திய பாக்கியம் கை கூடி வரும். பணம் நகைகள் விலை உயர்ந்த பொருட்களை பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள். புதிய வீடு வாகனம் வாங்கும் யோகம் வரும். வியாழக்கிழமை குரு பகவானை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.
தனுசு
சூரியன் ஏழாமிடத்தில் பயணம் செய்வதால் கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். அவ்வப்போது ஊடலுடன் கூடல் வரும். உறவினர்கள் வருகையும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். சிலருக்கு வீடு, மனை வாங்கும் யோகமும் உண்டாகும்.
முயற்சிகள் சாதகமாக முடியும். அலுவலகத்தில் இடமாற்றம் ஏற்படும். திருமணம் உள்ளிட்ட சுப காரிய பேச்சுவார்த்தைகள் தடைகளுக்குப் பிறகு நன்மையில் முடியும். சனிக்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு சென்று அனுமனுக்கு வெண்ணெய் சாற்றி வழிபடலாம்.

மகரம்
சூரியன் ஆறாமிடத்தில் பயணம் செய்வதால் எதிரிகள் தொல்லை நீங்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணவரவில் இருந்த தடைகள் விலகும். பெண்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். பணவருமானம் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமும் கூடுதல் விழிப்புணர்வும் தேவை. சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் வரும்.
சிலருக்கு எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் கைகூடி வரும். குரு பகவானின் பார்வையால் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியை ஏற்படுத்தும். கணவன் – மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். பணப்புழக்கம் கூடும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். ஞாயிறுக்கிழமைகளில் சூரியபகவானை வழிபட நன்மைகள் நடைபெறும்.
கும்பம்
சூரியன் பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாமிடத்தில் பயணிப்பது செழிப்பான காலம். உங்களின் பொருளாதார நிலைமை அற்புதமாக இருக்கும். அரசு அதிகாரிகளின் உதவி கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். குடும்பத்தில் வசதி வாய்ப்புகள் பெருகும். வீட்டில் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும்.
இல்லத்தரசிகள் புதிய ஆடை, ஆபரணங்களை வாங்குவீர்கள். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பிள்ளைகள் மூலம் சுப செய்திகள் தேடி வரும். சுப செலவுகளும் அதிகரிக்கும் உஷ்ணம் தொடர்பான நோய்கள் ஏற்படும் கவனம் தேவை. புதன்கிழமை சக்கரத்தாழ்வாரை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

மீனம்
சூரியன் நான்காமிடத்தில் பயணம் செய்வதால் அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வேலையில் இருக்கும் சிலருக்கு எதிர்பார்த்த இடமாறுதல் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சக வியாபாரிகளுடன் இணக்கமாகப் பழகுவது நல்லது. தேவையான பணம் கிடைக்கும்.
சிக்கனத்தை கடைபிடித்தால் சேமிக்கலாம். உயர் படிப்பு படிக்க விரும்பும் மாணவ மாணவிகள் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம். வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதில் தடைகள் வரலாம். வியாழக்கிழமை குருபகவானை வழிபட தடைகள் நீங்கி நன்மைகள் அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.