← முகப்பு இன்றைய ராசிபலன்

Jupiter Transit In Poosam Nakshatra On 18 June 2026: குரு பகவான் ஜூன்

🕐 14 Jun 2026 📂 இன்றைய ராசிபலன் 8 பார்வைகள்
Jupiter Transit In Poosam Nakshatra On 18 June 2026: குரு பகவான் ஜூன்

Jupiter Transit In Poosam Nakshatra On 18 June 2026: ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றுவது மட்டுமின்றி, நட்சத்திரத்தையும் மாற்றி, அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் சமீபத்தில் தான் தனது உச்ச ராசியான கடக ராசிக்குள் நுழைந்தார்.

இந்நிலையில் இந்த குரு பகவான் ஜூன் 18 ஆம் தேதி நட்சத்திரத்தை மாற்றவுள்ளார். அதுவும் இந்த நட்சத்திர மாற்றத்தின் போது, குரு பகவான் பூசம் நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார். இந்த பூச நட்சத்திரத்தின் அதிபதி சனி பகவான். இந்த பூச நட்சத்திரத்திற்குள் குரு பகவான் நுழைவது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த நட்சத்திரத்தில் குரு பகவான் ஆகஸ்ட் 18 ஆம் தேதி வரை இருப்பார்.

குரு பகவானின் இந்த பெயர்ச்சியின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். குறிப்பாக 4 ராசிக்காரர்கள் இந்த குரு நட்சத்திர பெயர்ச்சியால் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர். இப்போது குருவின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

Jupiter Transit In Poosam Nakshatra On 18 June 2026 List Of Lucky Zodiac Signs

கடகம்

குருவின் நட்சத்திர பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வகையான நல்ல செய்திகளைப் பெறுவார்கள். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. தொழிலில் புதிய திட்டங்களால் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைத்து, திருமணம் நடப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.

Jupiter Transit In Poosam Nakshatra On 18 June 2026 List Of Lucky Zodiac Signs

தனுசு

குருவின் நட்சத்திர பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்கள் நல்ல பலனைப் பெறுவார்கள். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண வரவு அதிகரிக்கும். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். இக்காலத்தில் புதிய முதலீடுகளை செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். குருவின் அருளால் வசதிகளும், ஆடம்பரங்களும் அதிகரிக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரிகளுக்கு எதிர்பாராத அளவில் லாபம் குவியும்.

Jupiter Transit In Poosam Nakshatra On 18 June 2026 List Of Lucky Zodiac Signs

கன்னி

குருவின் நட்சத்திர பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வீர்கள். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக முடிக்க முடியாமல் நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பணிபுரிபவர்களின் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன.

Jupiter Transit In Poosam Nakshatra On 18 June 2026 List Of Lucky Zodiac Signs

விருச்சிகம்

குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. மாணவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். வெளிநாடு செல்ல நினைப்பவர்களின் ஆசைகள் நிறைவேறும். குருவின் அருளால் பெரிய சாதனைகளைப் படைப்பீர்கள்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net