Shani Dev's Position: ஜோதிடத்தின் படி, நவகிரகங்களில் ஒருவரது கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களைத் தரக்கூடியவர் தான் சனி பகவான். இந்த சனி பகவான் தனது ராசி மாற்றத்தாலும், நட்சத்திர மாற்றத்தாலும், ஏன் பார்வையாலும் கூட ஒருவரது வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் தான் சனிப்பெயர்ச்சி என்றாலே பலரும் அஞ்சுகின்றனர். ஏனெனில் சனி பகவான் பல பிரச்சனைகளை சந்திக்க வைத்து, வாழ்க்கையை புரிய வைப்பார்.
தற்போது சனி பகவான் மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்த மீன ராசியில் ஜூன் 2027 ஆம் ஆண்டு வரை இருந்து பின் மேஷ ராசிக்குள் நுழையவுள்ளார். இன்னும் 1 வருட காலம் மீன ராசியில் பயணிக்கப் போகும் சனி பகவானால் சில ராசிக்காரர்கள் நல்ல நன்மைகளைப் பெறவுள்ளனர். சொல்லப்போனால் நல்ல வளர்ச்சியை, முன்னேற்றத்தைக் காணவுள்ளனர். இப்போது சனி பகவானின் நிலையால் எந்த ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர் என்பதைக் காண்போம்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டில் சனி பகவான் உள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு பலவிதங்களில் மங்களகரமானதாக இருக்கும். செய்யும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காணக்குடும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. நீண்ட காலமாக தடைபட்டு வந்த வேலைகள் இனி வெற்றிகரமாக நடக்கும்.
புதிய சொத்து அல்லது பரம்பரை சொத்துக்கள் போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளன. வணிகர்கள் எதிர்பாராத அளவில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. இக்காலத்தில் செய்யும் முதலீடுகள் எதிர்காலத்தில் நல்ல லாபத்தையும், வருமான வாய்ப்பையும் தரும். நிதி நிலைமை வலுவடையும். நீண்ட காலமாக சந்தித்து வந்த மன அழுத்தம் குறையும். மொத்தத்தில் வெற்றியும், மரியாதையும் அதிகம் கிடைக்கும்.

கன்னி
கன்னி ராசியின் 7 ஆவது வீட்டில் சனி பகவான் உள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் இதுவரை வாழ்வில் பல சவால்களை சந்தித்து வந்தால், அதிலிருந்து விடுதலை கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இக்காலத்தில் எடுக்கும் முக்கிய முடிவுகளின் போது வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆலோசனையைப் பெறுவது நல்லது. திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.
வீட்டில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். திறமைகள் அதிகரிக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். நீதிமன்ற விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். நீண்ட காலமாக சந்தித்து வந்த மனக்கவலைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

மகரம்
மகர ராசியின் 3 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் பல நாள் பிரச்சனைகள் தீரும். நீண்ட காலமாக கஷ்டப்பட்டு உழைத்து வந்த விஷயங்களில் நேர்மறையான பலன்களைப் பெறக்கூடும். சனி பகவானின் அருளால் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
வருமானம் அதிகரிக்கும். அப்படி அதிகரிக்கும் வருமானத்தை சரியாக சேமித்து, முதலீடுகளை செய்தால், எதிர்காலத்தில் நல்ல லாபத்தைப் பெறலாம். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும் வாய்ப்புள்ளது. முக்கியமாக ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து இரட்டிப்பு லாபம் இனி கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.