← முகப்பு பதிவு

சுரேஷ் சலேவின் விவகாரத்தில் தற்போதைய அரசு முற்றிலும் நீதியான முறையில் சட்டங்களை நடைமுறைப்படுத்தத வேண்டும் என்ற

🕐 3 மணி நேரம் முன்னர் 📂 பதிவு 10 பார்வைகள்
சுரேஷ் சலேவின் விவகாரத்தில் தற்போதைய அரசு முற்றிலும் நீதியான முறையில் சட்டங்களை நடைமுறைப்படுத்தத வேண்டும் என்ற
சுரேஷ் சலே விவகாரம்:ரணில் தரப்பு ஆதரவு!

சுரேஷ் சலேவின் விவகாரத்தில் தற்போதைய அரசு முற்றிலும் நீதியான முறையில் சட்டங்களை நடைமுறைப்படுத்தத வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் அஜித் மானப்பெரும தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், "அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதிலோ அல்லது அவரிடம் விரிவான விசாரணைகளை முன்னெடுப்பதிலோ எமக்கு எவ்விதப் பிரச்சினையும் இல்லை.

அதற்கு எமது முழுமையான ஆதரவு உண்டு. இருப்பினும், நாட்டின் சட்டதிட்டங்களின்படி சந்தேகநபர் ஒருவரை எவ்விதம் நடத்த வேண்டும் என்பதற்கான தெளிவான விதிமுறைகள் உள்ளன.

அந்தச் சட்ட நடைமுறைகளையும் மனித உரிமைகளையும் மீறி எதேச்சதிகாரமாகச் செயற்படுவதற்கு எவருக்கும் அனுமதியில்லை. அத்தகைய சட்ட அத்துமீறல்களையே நாம் வன்மையாக எதிர்க்கின்றோம். எனவே, சலேவின் விவகாரத்தில் அரசு சட்டத்துக்குப் புறம்பாகச் செயற்படாது, நீதியான முறையில் நடந்துகொள்ள வேண்டும்." – என்றார்.

மேலும் செய்திகள்
பதிவு
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலருமான கோத்தபாய நாட்டை விட்டு தப்பிக்க திட்ட
3 மணி நேரம் முன்னர்
பதிவு
சுவிட்சர்லாந்து வாக்காளர்கள், நாட்டின் மக்கள்தொகையை 10 மில்லியனாகக் கட்டுப்படுத்தும் ஒரு முன்மொழிவை நிராகரித்த
3 மணி நேரம் முன்னர்
பதிவு
முதலாவது அமைதி ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை கையெழுத்தாகலாம் என டொனால்ட் டிரம்ப் தெரிவித்த நிலையில், அந்த காலக்கெட
6 மணி நேரம் முன்னர்
பதிவு
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில் இருந்து ஒரு குழந்தையின் என்புக்கூடும், நான்கு சிறுவர்களுடைய என்பு கூடுகள
7 மணி நேரம் முன்னர்
பதிவு
மக்களின் வாக்குகளால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என தெரிந்து , தேசிய மக்கள் சக்தியிடம்
8 மணி நேரம் முன்னர்
பதிவு
வடக்கில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை கடந்த காலங்களில்எடுத்தோம். இதனால் , வடக்கி
8 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net