← முகப்பு பதிவு

மக்களின் வாக்குகளால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என தெரிந்து , தேசிய மக்கள் சக்தியிடம்

🕐 9 மணி நேரம் முன்னர் 📂 பதிவு 16 பார்வைகள்
மக்களின் வாக்குகளால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என தெரிந்து , தேசிய மக்கள் சக்தியிடம்
மஹிந்த கேட்டவுடன் ஆட்சியை தூக்கி கொடுக்க முடியாது

மக்களின் வாக்குகளால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என தெரிந்து , தேசிய மக்கள் சக்தியிடம் ஆட்சியை தா என மஹிந்த தரப்பு கேட்டு நிற்கிறது என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார்.

கோப்பாய் பொலிஸ் நிலைய திறப்பு விழாவில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் களுத்துறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சே நடைபெற்ற பாராட்டு விழாவில் மஹிந்த ராஜபக்சே தெரிவித்த கருத்து தொடர்பில் கேட்ட போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

நாட்டை தங்களிடம் தருமாறு மஹிந்த தரப்பு கோரியுள்ளது. இந்த அரசாங்கம் , நாட்டு மக்கள் வாக்களித்து ஜனநாயக ரீதியாக அமைந்த அரசாங்கம். அவர்கள் இனி தேர்தலில் வெல்ல முடியாது. என தெரிந்து கொண்டு , எம்மிடம் ஆட்சியை கேட்கின்றார்கள்

எங்களுடைய அரசாங்கம் ஊழல் வாதிகளை தண்டிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் , புதிய அரசியல் கலாச்சாரத்தை முன்னெடுத்து வருகிறது

மக்களின் பணத்தை சூறையாடியவர்கள் , ஆட்சிக்காக பல கொலைகளை செய்தவர்கள் , இன்று மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு வருகின்றனர். அதனால் அவர்கள் மீண்டும் மக்கள் வாக்குகளால் ஆட்சிக்கு வர முடியாது அதனால் எம்மிடம் ஆட்சி அதிகாரங்களை தாருங்கள் என கேட்டு நிற்கின்றனர்.

அவர்கள் கேட்பதற்காக மக்களால் தெரிவு செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தி ஆட்சி அதிகாரங்களை அவர்களிடம் கையளிக்க மாட்டாது மக்கள் இந்த ஆட்சியை விரும்புகின்றனர். எதிர்வரும் காலங்களிலும் தேசிய மக்கள் சக்தியே மக்களால் தெரிவு செய்யப்பட்ட கட்சியாக தொடர்ந்தும் ஆட்சியில் இருக்கும் என தெரிவித்தார்.

மேலும் செய்திகள்
பதிவு
சுரேஷ் சலேவின் விவகாரத்தில் தற்போதைய அரசு முற்றிலும் நீதியான முறையில் சட்டங்களை நடைமுறைப்படுத்தத வேண்டும் என்ற
4 மணி நேரம் முன்னர்
பதிவு
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலருமான கோத்தபாய நாட்டை விட்டு தப்பிக்க திட்ட
4 மணி நேரம் முன்னர்
பதிவு
சுவிட்சர்லாந்து வாக்காளர்கள், நாட்டின் மக்கள்தொகையை 10 மில்லியனாகக் கட்டுப்படுத்தும் ஒரு முன்மொழிவை நிராகரித்த
4 மணி நேரம் முன்னர்
பதிவு
முதலாவது அமைதி ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை கையெழுத்தாகலாம் என டொனால்ட் டிரம்ப் தெரிவித்த நிலையில், அந்த காலக்கெட
7 மணி நேரம் முன்னர்
பதிவு
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில் இருந்து ஒரு குழந்தையின் என்புக்கூடும், நான்கு சிறுவர்களுடைய என்பு கூடுகள
8 மணி நேரம் முன்னர்
பதிவு
வடக்கில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை கடந்த காலங்களில்எடுத்தோம். இதனால் , வடக்கி
9 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net