← முகப்பு பதிவு

முதலாவது அமைதி ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை கையெழுத்தாகலாம் என டொனால்ட் டிரம்ப் தெரிவித்த நிலையில், அந்த காலக்கெட

🕐 7 மணி நேரம் முன்னர் 📂 பதிவு 8 பார்வைகள்
முதலாவது அமைதி ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை கையெழுத்தாகலாம் என டொனால்ட் டிரம்ப் தெரிவித்த நிலையில், அந்த காலக்கெட
டிரம்ப்பும் பாகிஸ்தானும் உடன்பாடு குறித்துப் பேசினாலும், சந்தேகங்கள் நீடிக்கின்றன

முதலாவது அமைதி ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை கையெழுத்தாகலாம் என டொனால்ட் டிரம்ப் தெரிவித்த நிலையில், அந்த காலக்கெடு குறித்து ஈரான் சந்தேகம் எழுப்பியுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், 24 மணி நேரத்திற்குள் இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என எதிர்பார்ப்பதாக சனிக்கிழமை தெரிவித்தார்.

ஆனால், ஞாயிற்றுக்கிழமை கையெழுத்திடும் திட்டங்கள் குறித்து ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை மறுத்துள்ளது.இரு நாடுகளுக்கும் இடையிலான போரைத் தற்காலிகமாக முடிவுக்குக் கொண்டுவரும் அமெரிக்காவுடனான ஒப்பந்தம் குறித்து ஈரான் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என, ஈரானிய பேச்சுவார்த்தைக் குழுவுக்கு நெருக்கமான, நன்கு அறிந்த ஒரு வட்டாரத்தை மேற்கோள் காட்டி ஈரானிய செய்தி நிறுவனமான ஃபார்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தம் ஹோர்முஸ் ஜலசந்தியின் மீதான தெஹ்ரானின் செல்வாக்கைப் பறித்துவிடும் என்று வாதிடுவதால், ஈரானிய கடும்போக்குவாதிகள் இதனை எதிர்ப்பதாக அறியப்படுகிறது.

இரு தரப்பினரும் ஒரு ஒப்பந்தத்தை எட்டும் தருவாயில் இருப்பதாக டொனால்ட் டிரம்ப் பலமுறை கூறிவந்த நிலையில், இம்முறை இடைக்கால ஒப்பந்தத்தின் உரைப்பகுதி குறித்து சில உடன்பாடுகள் எட்டப்பட்டதாக இரு தரப்பிலிருந்தும் தெளிவான உறுதிப்படுத்தல் வந்துள்ளது.

மேலும் செய்திகள்
பதிவு
சுரேஷ் சலேவின் விவகாரத்தில் தற்போதைய அரசு முற்றிலும் நீதியான முறையில் சட்டங்களை நடைமுறைப்படுத்தத வேண்டும் என்ற
4 மணி நேரம் முன்னர்
பதிவு
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலருமான கோத்தபாய நாட்டை விட்டு தப்பிக்க திட்ட
4 மணி நேரம் முன்னர்
பதிவு
சுவிட்சர்லாந்து வாக்காளர்கள், நாட்டின் மக்கள்தொகையை 10 மில்லியனாகக் கட்டுப்படுத்தும் ஒரு முன்மொழிவை நிராகரித்த
4 மணி நேரம் முன்னர்
பதிவு
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில் இருந்து ஒரு குழந்தையின் என்புக்கூடும், நான்கு சிறுவர்களுடைய என்பு கூடுகள
8 மணி நேரம் முன்னர்
பதிவு
மக்களின் வாக்குகளால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என தெரிந்து , தேசிய மக்கள் சக்தியிடம்
9 மணி நேரம் முன்னர்
பதிவு
வடக்கில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை கடந்த காலங்களில்எடுத்தோம். இதனால் , வடக்கி
9 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net