← முகப்பு தமிழ்

காலி முகத்திடலில் இன்று (14) நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கலாசார நிகழ்வில், 5,000க்கும் மேற்பட்ட பரதநாட்டி

🕐 14 Jun 2026 📂 தமிழ் 2 பார்வைகள்

இந்தியாவில் இடம்பெற்ற அயலக தமிழர் மாநாட்டில் கலந்து கொண்டிருந்தபோது பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் விடுத்த வேண்டுகோளுக்கு அமையவும், அவரின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனையின் பேரில், சங்கமம் குளோபல் அகடமி மற்றும் சங்கமம்லியா ஹொலிடேஸ் ஏற்பாட்டிலும் இந்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

இதற்கு முன்னர் பரதநாட்டியத் துறையில் படைக்கப்பட்டிருந்த உலக சாதனையானது வெறும் 416 கலைஞர்களின் பங்கேற்புடன் மட்டுமே அமைந்திருந்தது.

ஆனால், இம்முறை அதனை விடப் பல மடங்கு அதிகமாக, இந்தியா மற்றும் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 5000 கலைஞர்கள் கலந்துகொண்டு முந்தைய சாதனையை முறியடித்துள்ளனர்.

இந்த வரலாற்று நிகழ்வை நேரில் காண பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள், கலை ஆர்வலர்கள் மற்றும் வெளிநாட்டு பார்வையாளர்கள் காலி முகத்திடலில் குழுமியிருந்தனர்.

சங்கமம் 2026 நிகழ்வானது உலக சாதனை புத்தகமான கின்னஸில் இடம் பிடித்ததை உறுதி செய்து கின்னஸ் சாதனை நிறுவனத்தினால் சான்றிதழ் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்
📰
தமிழ்
வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் எனப்படும் TIN இலக்கத்தை, சுமார் 40 இலட்சம் பேர் இதுவரை
14 Jun 2026
📰
தமிழ்
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகளை வெளியிடுவது தாமதமடையக்கூடும் என பரீட்சைத் திணைக்களம்
14 Jun 2026
📰
தமிழ்
பிரபாகரனின் மகன் குறித்து பேசும் ஹக்கீம், 1990 ஜூன் 11-ஐ மறந்துவிட்டாரா? – கலீலுர் ரஹ்மான்
1 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
வெளிநாட்டு கடன் வழங்குநருக்கு திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் மூன்றாம் தரப்பினரால் மோசடி செய்யப
1 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
யார் என்ன கூறினாலும், நீண்டகாலமாக நான் நன்கு அறிந்த அரச அதிகாரியான சுரேஷ் சலே என்பவர்
2 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
2026 உலகக் கிண்ணக் காற்பந்துத் தொடரின் 'D' குழுவில் துருக்கியுடன் நடைபெற்ற போட்டியில், அவுஸ்திரேலிய
2 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net