← முகப்பு பதிவு

வடக்கில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை கடந்த காலங்களில்எடுத்தோம். இதனால் , வடக்கி

🕐 9 மணி நேரம் முன்னர் 📂 பதிவு 10 பார்வைகள்
வடக்கில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை கடந்த காலங்களில்எடுத்தோம். இதனால் , வடக்கி
தெற்கில் மீண்டும் இனவாதத்தை தூண்ட முயல்கின்றனர் – யாழில். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கவலை

வடக்கில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை கடந்த காலங்களில்எடுத்தோம். இதனால் , வடக்கில் பல சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்தி உள்ளோம்

இந்த நாட்டில் அனைத்து மக்களும் ஒன்றிணைந்து சட்டவாட்சியை நடைமுறைப்படுத்த ஒத்துழைத்து வருகின்றனர். வடக்கு கிழக்கு தெற்கு மேற்கு என்ற ந்த பாகுபாடுகள் இன்றி அனைத்து மக்களுக்கும் ஒரே சட்டமே நடைமுறையில் உள்ளது.

தெற்கு அரசியல்வாதிகள், மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காக இனங்களுக்கு இடையில் குரோதத்தை ஏற்படுத்தும் விதமாக கருத்துக்களை தெரிவிக்கின்றனர் . ஆனால் நாட்டில் மீண்டும் இனவாதம் தலை தூக்க நாம் அனுமதிக்க மாட்டோம்

வடக்கு பகுதியில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி மக்களை சந்தோஷமாக சுதந்திரமாக வாழ வைப்போம்.

எளியோருக்கு ஒரு நீதியும் பிரபலமானவர்களுக்கு ஒரு நீதியும் என இந்த நாட்டில் இல்லை. அனைவருக்கும் பொதுவான நீதியே உண்டு. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு என்ற வகையில் அனைவருக்கும் சட்டம் சமம் என்பதையும் , பொலிஸார் பாரபட்சம் இன்றி சட்டத்தை நடைமுறைப்படுத்த வேணும் என பணித்துள்ளோம்.

கட்சி ஜாதி இனம் மதம் என்ற எந்த வேறுபாடுகளும் இன்றி, அனைவரும் ஒரே இனம் என்ற சூழலை உருவாக்க வேண்டும் இந்த நாட்டில் மீண்டும் இனங்களுக்கு இடையில் முறுகல் நிலை ஏற்படமாட்டாது

இந்த பிரதேசத்தில் வாழும் உங்கள் பிள்ளைகள், உங்களின் எதிர்கால சந்ததியினர் இந்த நாட்டில் சந்தோசமாக ஒற்றுமையாக வாழ வேண்டும் அவ்வாறான சூழல் உருவாக வேண்டும்.

பிரிவினை வாதம் வேறுபாடுகள் தலைதூக்க அனுமதிக்க கூடாது.. அவ்வாறான நிலை எதிர்கால சந்ததியினருக்கு ஏற்பட கூடாது. எமது பிரதான நோக்கம் எதிர்கால சந்ததியின் ஒற்றுமையான வாழ்வே.

அதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகளுக்கு தீர்வு கிடைக்கா விடின், உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவியுங்கள். அல்லது பொலிஸ் மா அதிபருக்கு சொல்லுங்கள்.தமக்கான நீதியினை பெற்றுக்கொள்ள அனைவருக்கும் உரிமை உண்டு

பொலிஸாருக்கு கிடைக்கும் உயரிய விருதே , மக்களால் பொலிஸாருக்கு வழங்கப்படும் விருதே. எனவே மக்களின் நன்மதிப்பை பொலிஸார் பெற வேண்டும். அவ்வாறு நன்மதிப்பை பெற்றுக்கொள்வதே பொலிஸாருக்கு கிடைக்கும் உயரிய விருதாகும்.

வடக்கில் மொழி பிரச்சனை இன்றி சேவைகளை பெற நடவடிக்கை எடுத்துள்ளோம். அதேபோன்று வடக்கில் உள்ள மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் , வடக்கில் சிறப்பான சேவையை மேலும் மேம்படுத்தவும் , வடக்கில் உள்ள இளையோரும் பொலிஸ் சேவைகளில் தாமாக முன்வந்து இணைய வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்
பதிவு
சுரேஷ் சலேவின் விவகாரத்தில் தற்போதைய அரசு முற்றிலும் நீதியான முறையில் சட்டங்களை நடைமுறைப்படுத்தத வேண்டும் என்ற
4 மணி நேரம் முன்னர்
பதிவு
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலருமான கோத்தபாய நாட்டை விட்டு தப்பிக்க திட்ட
4 மணி நேரம் முன்னர்
பதிவு
சுவிட்சர்லாந்து வாக்காளர்கள், நாட்டின் மக்கள்தொகையை 10 மில்லியனாகக் கட்டுப்படுத்தும் ஒரு முன்மொழிவை நிராகரித்த
4 மணி நேரம் முன்னர்
பதிவு
முதலாவது அமைதி ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை கையெழுத்தாகலாம் என டொனால்ட் டிரம்ப் தெரிவித்த நிலையில், அந்த காலக்கெட
7 மணி நேரம் முன்னர்
பதிவு
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில் இருந்து ஒரு குழந்தையின் என்புக்கூடும், நான்கு சிறுவர்களுடைய என்பு கூடுகள
8 மணி நேரம் முன்னர்
பதிவு
மக்களின் வாக்குகளால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என தெரிந்து , தேசிய மக்கள் சக்தியிடம்
9 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net