இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே மேலும் பதிலடித் தாக்குதல்கள் நடத்தாது என அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். ஆக்சியோஸ் என்ற இணைய ஊடகத்திற்கு அளித்த ஒரு சிறிய பேட்டியிலேயே அவர் தெரிவித்தார்.
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அவரது புனைப்பெயரால் குறிப்பிட்டு, நான் இப்போதே பிபியை அழைத்து பதிலடி கொடுக்க வேண்டாம் என்று சொல்லப் போகிறேன் என டிரம்ப் கூறினார்.
ஆரம்பத்தில் இஸ்ரேல் தனது தாக்குதலை நடத்தியது, ஈரான் தனது தாக்குதலை நடத்தியது. நமக்கு இன்னொரு தாக்குதல் தேவையில்லை.
ஈரானியத் தாக்குதல்களால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று டிரம்ப் மேலும் கூறினார்.
இஸ்ரேல் பதிலடி கொடுக்காது என்று நம்புகிறேன். ஒருவேளை பிபி அவர்களைத் திருப்பித் தாக்கினால் இது கடந்த 47 ஆண்டுகளாக அல்லது கடந்த 3,000 ஆண்டுகளாக நடந்து வரும் பகை போலவே தொடர்ந்துகொண்டே இருக்கும் என்று டிரம்ப் கூறினார்.
அமெரிக்காவும் ஈரானும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை எட்டுவதற்கு மிக அருகில் இருப்பதாக அவர் மீண்டும் ஒருமுறை கூறினார்.
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே மேலும் பதிலடித் தாக்குதல்கள் நடத்தாது என அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்
இஸ்ரேல் பதிலடி கொடுக்காது என நம்புகிறேன் – டிரம்ப்