← முகப்பு பதிவு

கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தை பிரதிநித்துவப்படுத்திய பணியாற்றி வந்திருந்த சிங்கள அதிகாரியொருவர் பலியாகியுள்ளார்

🕐 9 மணி நேரம் முன்னர் 📂 பதிவு 12 பார்வைகள்
கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தை பிரதிநித்துவப்படுத்திய பணியாற்றி வந்திருந்த சிங்கள அதிகாரியொருவர் பலியாகியுள்ளார்
பூநகரி:சிங்கள அதிகாரி பலி!

கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தை பிரதிநித்துவப்படுத்திய பணியாற்றி வந்திருந்த சிங்கள அதிகாரியொருவர் பலியாகியுள்ளார்.

கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் காணாமல் போயிருந்த வனவள வட்டார அதிகாரி பாழடைந்த கிணற்றில் இருந்து சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார்

அனுராதபுரம் தம்புத்தேகம பிரதேசத்தை சேர்ந்த 41 வயதுடைய குறித்த வனவள திணைக்கள அதிகாரி கிளிநொச்சி ஜெயபுரத்தில் இயங்கும் வட்டார வனவள திணைக்கள அலுவலகத்தில் கடமையாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் குறித்த நபர் காணாமல் போயிருப்பதாக ஜெயபுரம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது

நேற்று மாலை காவல்துறை விசாரணை அதிகாரிகள் மோப்ப நாய்களின் உதவியுடன் நடத்திய தேடுதலின் போது, அந்த அலுவலகத்தின் பின்புறத்தில் இருந்து காணாமல் போன நபரின் கைபேசி கண்டெடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அதற்கு அருகிலிருந்த கிணற்றை பரிசோதித்த போதே அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

41 வயதுடைய ஆரட்சி பன்டாரகே சந்திர வன்சல கோசல விஜய சேகர என்பவரே இவ்வாறு சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார் சம்பவம் தொடர்பில் ஜெயபுரம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

மேலும் செய்திகள்
பதிவு
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே மேலும் பதிலடித் தாக்குதல்கள் நடத்தாது என அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்
2 மணி நேரம் முன்னர்
பதிவு
அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடர்ந்தால் விரிவான பதிலடி கொடுக்கப்படும் என ஐ.ஆர்.ஜி.சி எச்சரிக்கை விடுத்துள்ள
2 மணி நேரம் முன்னர்
பதிவு
வடக்கு இஸ்ரேலில் உள்ள ஹைஃபா நகரிலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ரமத் டேவிட்
2 மணி நேரம் முன்னர்
பதிவு
ஓமந்தை பகுதியிலுள்ள ஆலயத்தில் தாய் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அவரது மகன் கத்திக்குத்துக்க
9 மணி நேரம் முன்னர்
பதிவு
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 302 ஆக
9 மணி நேரம் முன்னர்
பதிவு
யாழ்ப்பாணத்தில் "சுயமரியாதை நடை – 2026" நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்றது.யாழ்ப்பாணம் பொதுசன நூலக
13 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net