← முகப்பு பதிவு

அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடர்ந்தால் விரிவான பதிலடி கொடுக்கப்படும் என ஐ.ஆர்.ஜி.சி எச்சரிக்கை விடுத்துள்ள

🕐 1 மணி நேரம் முன்னர் 📂 பதிவு 6 பார்வைகள்
அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடர்ந்தால் விரிவான பதிலடி கொடுக்கப்படும் என ஐ.ஆர்.ஜி.சி எச்சரிக்கை விடுத்துள்ள
அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடர்ந்தால் பதிலடி கொடுக்கப்படும் – ஐ.ஆர்.ஜி.சி

அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடர்ந்தால் விரிவான பதிலடி கொடுக்கப்படும் என ஐ.ஆர்.ஜி.சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
அனைத்து முனைகளிலும் போர் நிறுத்தம் என்ற நிபந்தனையின் பேரில் அமெரிக்காவுடன் போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டதாக ஐ.ஆர்.ஜி.சி. தெரிவித்துள்ளது.
ஆனால், லெபனானில் தாக்குதல்களைத் தொடுத்ததன் மூலமும், ஹோர்முஸ் ஜலசந்தி, ஓமான் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலில் ஈரானியக் கடற்கரைகள் மற்றும் கப்பல்கள் மீது மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்தி போர் நிறுத்தத்தை மீறியதன் மூலமும் அமெரிக்காவும் இஸ்ரேலும் தங்கள் வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிவிட்டன என்று அது கூறியது.
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு ஒப்பந்தத்தை நோக்கிய பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தபோதிலும், அமெரிக்கா ஈரானிய துறைமுகங்களுக்குக் கடற்படை முற்றுகையை விதித்திருப்பதோடு, சமீப நாட்களாக ஈரானுக்கு எதிராகத் தொடர்ச்சியான தாக்குதல்களையும் நடத்தி வருகிறது.
இன்றிரவு நடந்த நடவடிக்கை ஒரு எச்சரிக்கை என்று ஐ.ஆர்.ஜி.சி தனது அறிக்கையில் கூறியுள்ளதுடன் ஆக்கிரமிப்புகள் மீண்டும் தொடர்ந்தால், பதிலடிகள் இன்னும் விரிவானதாக இருக்கும் என்றும் அது மேலும் குறிப்பிட்டுள்ளது.

மேலும் செய்திகள்
பதிவு
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே மேலும் பதிலடித் தாக்குதல்கள் நடத்தாது என அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்
1 மணி நேரம் முன்னர்
பதிவு
வடக்கு இஸ்ரேலில் உள்ள ஹைஃபா நகரிலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ரமத் டேவிட்
1 மணி நேரம் முன்னர்
பதிவு
ஓமந்தை பகுதியிலுள்ள ஆலயத்தில் தாய் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அவரது மகன் கத்திக்குத்துக்க
8 மணி நேரம் முன்னர்
பதிவு
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 302 ஆக
8 மணி நேரம் முன்னர்
பதிவு
கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தை பிரதிநித்துவப்படுத்திய பணியாற்றி வந்திருந்த சிங்கள அதிகாரியொருவர் பலியாகியுள்ளார்
9 மணி நேரம் முன்னர்
பதிவு
யாழ்ப்பாணத்தில் "சுயமரியாதை நடை – 2026" நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்றது.யாழ்ப்பாணம் பொதுசன நூலக
12 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net