← முகப்பு இன்றைய ராசிபலன்

Saturn Retrograde In Pisces On 27 July 2026: சனி பகவான் ஜூலை 27

🕐 07 Jun 2026 📂 இன்றைய ராசிபலன் 4 பார்வைகள்
Saturn Retrograde In Pisces On 27 July 2026: சனி பகவான் ஜூலை 27

Saturn Retrograde In Pisces On 27 July 2026: ஜோதிடத்தில் சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தரக்கூடியவர். இப்படிப்பட்ட சனி பகவான் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் வரை இருப்பார். மேலும் இவர் மகரம் மற்றும் கும்ப ராசிகளின் அதிபதியாவார். தற்போது சனி பகவான் மீன ராசியில் பயணித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த சனி பகவான் ஜூலை 27 ஆம் தேதி மீன ராசியில் வக்ர நிலையில் பயணிக்கவுள்ளார். அதுவும் இந்த நிலையில் சுமார் 138 நாட்கள் வரை இருப்பார். இந்த வக்ர நிலையில் சனி பகவான் டிசம்பர் 11 ஆம் தேதி வரை இருப்பார். இப்படி சனி பகவான் வக்ரமாவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

அதில் சிலருக்கு மோசமாக இருந்தாலும், சில ராசிக்காரர்கள் சனி பகவானால் சிறப்பான பலன்களைப் பெறுவார். குறிப்பாக 4 ராசிக்காரர்கள் தொழிலில் நல்ல முன்னேற்றத்தையும், வருமானத்தில் நல்ல உயர்வையும் காணவுள்ளனர். இப்போது சனி பகவான் வக்ரமாவதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

Saturn Retrograde In Pisces On 27 July 2026 People Of These Zodiac Signs Will See Career Growth Salary Hike

மேஷம்

மேஷ ராசியின் 12 ஆவது வீட்டில் சனி பகவான் வக்ரமாகியுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும். தொழிலில் எதிர்பாராத நன்மைகளைப் பெறக்கூடும். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக நடக்கும். வேலையை மாற்ற நினைத்துக் கொண்டிருந்தால், இக்காலத்தில் அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.

Saturn Retrograde In Pisces On 27 July 2026 People Of These Zodiac Signs Will See Career Growth Salary Hike

மிதுனம்

மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் சனி பகவான் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். வியாபாரிகள் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள். புதிதாக வேலையை தொடங்கும் எண்ணம் இருந்தால், அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கலாம். வெளிநாட்டில் வேலை செய்ய வேண்டுமென்ற ஆசை இருந்தால், அதற்கான வாய்ப்பு கிடைக்கலாம். வருமானத்தில் திடீர் உயர்வு ஏற்படும். இதன் மூலம் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.

Saturn Retrograde In Pisces On 27 July 2026 People Of These Zodiac Signs Will See Career Growth Salary Hike

சிம்மம்

சிம்ம ராசியின் 8 ஆவது வீட்டில் சனி பகவான் வக்ரமாகவுள்ளார். இதன் காரணமாக இந்த ராசிக்காரர்கள் வாழ்வில் நல்ல மாற்றங்களைக் காண்பார்கள். பரம்பரை சொத்துக்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும். புதிய தொழிலை தொடங்க நீண்ட காலமாக நினைத்திருந்தால், இக்காலம் அதற்கு சிறப்பானதாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். சிலர் புதிய திட்டங்களில் பணிபுரிவதற்கான வாய்ப்புக்களைப் பெறுவார்கள்.

Saturn Retrograde In Pisces On 27 July 2026 People Of These Zodiac Signs Will See Career Growth Salary Hike

தனுசு

தனுசு ராசியின் 4 ஆவது வீட்டில் சனி பகவான் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படக்கூடும். கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தால், அதிலிருந்து விடுபடுவீர்கள். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். நிரந்தர வருமானம் உருவாகும் வாய்ப்புள்ளது.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net