வடக்கு இஸ்ரேலில் உள்ள ஹைஃபா நகரிலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ரமத் டேவிட் விமானப்படைத் தளம் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) தெரிவித்துள்ளது.
தெற்கு லெபனான் மற்றும் பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளுக்கு எதிராகத் இஸ்ரேலால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு இஸ்ரேலிய விமானப்படைத் தளமே மூலக்காரணம் என்று அது கூறி ஈரான் தாக்குதலைத் தொடுத்தது.
ஈரானிலிருந்து ஏவப்பட்ட அனைத்து ஏவுகணைகளையும் தங்களது பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்ததாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
லெபனான் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்த வேண்டும், இல்லையெனில் மேலும் கடுமையான அடிகளை சந்திக்க நேரிடும் என்று ஈரான் ராணுவம் கூறியுள்ளது.
பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளைக் குறிவைத்தும், தெற்கு லெபனான் முழுவதும் தனது தாக்குதல்களை இஸ்ரேல் அதிகதித்த நிலையில் அனைத்து சிவப்பு கோடுகளையும் இஸ்ரேல் மீறிவிட்டது என்று ஈரான் கூறியது.
அனைத்து முனைகளிலும் போர் நிறுத்தம் என்ற நிபந்தனையின் பேரில் அமெரிக்காவுடனான போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் தீவிர வலதுசாரி தேசிய பாதுகாப்பு அமைச்சர் இட்டாமர் பென்-க்விர் தெஹ்ரான் எரிய வேண்டும் என்று கூறியுள்ளார்.
வடக்கு இஸ்ரேலில் உள்ள ஹைஃபா நகரிலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ரமத் டேவிட்
இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!