← முகப்பு செய்திகள்

IPL 2026: Vaibhav Suryavanshi's Sixer Storm; Rajasthan Royals get 221-Run Chase Against

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 41 பார்வைகள்
IPL 2026: Vaibhav Suryavanshi's Sixer Storm; Rajasthan Royals get 221-Run Chase Against

ஜெய்ப்பூர்: 2026 ஐபிஎல் தொடரின் 64-வது லீக் ஆட்டத்தில், 221 ரன்கள் என்ற இமாலய இலக்கை வெறும் 19.1 ஓவர்களிலேயே எட்டிப் பிடித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. 15 வயது இளம் அதிரடி மன்னன் வைபவ் சூர்யவன்ஷி ஆடிய வெறியாட்டம் லக்னோ பந்துவீச்சாளர்களை நிலைகுலைக்கச் செய்தது.

ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி, மிட்செல் மார்ஷின் அதிரடியால் ரன் மழை பொழிந்தது. மிட்செல் மார்ஷ் மற்றும் ஜோஷ் இங்லிஸ் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 109 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தது. அதிரடியாக ஆடிய இங்லிஸ் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட மிட்செல் மார்ஷ் 96 ரன்கள் எடுத்திருந்தபோது ரன்-அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். கேப்டன் ரிஷப் பண்ட் தனது பங்கிற்கு 35 ரன்கள் சேர்க்க, லக்னோ அணி 20 ஓவர்களில் 220 ரன்கள் என்ற மிகப்பெரிய ஸ்கோரை எட்டியது.

IPL 2026 Vaibhav Suryavanshi s Sixer Storm Rajasthan Royals get 221-Run Chase Against Lucknow Super Giants

221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தான் அணிக்கு, கேப்டன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 43 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கம் கொடுத்தார். ஆனால், இம்பாக்ட் பிளேயராக களம் புகுந்த வைபவ் சூர்யவன்ஷி தான் ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். லக்னோ பந்துவீச்சாளர்களின் வேகத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அவர், மைதானத்தின் நாலாபுறமும் சிக்ஸர்களைப் பறக்கவிட்டார்.

வெறும் 38 பந்துகளைச் சந்தித்த வைபவ் சூர்யவன்ஷி, 10 மெகா சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகளுடன் 93 ரன்கள் விளாசினார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 244.73 ஆக இருந்தது லக்னோ அணியை வெலவெலக்க வைத்தது. வைபவ் ஆட்டமிழந்த பிறகு, துருவ் ஜூரல் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 38 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

லக்னோ அணி தரப்பில் ஆகாஷ் சிங் 3 ஓவர்களிலேயே 54 ரன்களை வாரி வழங்கினார். மயங்க் யாதவ் 4 ஓவர்களில் 50 ரன்கள் கொடுத்தார். ராஜஸ்தான் அணி 19.1 ஓவர்களிலேயே 225 ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி 14 புள்ளிகளுடன் பிளே-ஆப் ரேசில் தனது நிலையை வலுப்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net