புங்குடுதீவு பகுதியை சேர்ந்த மூன்று மீனவர்கள் நேற்று முன்தினம் (5) கடற்தொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல் போயிருந்தனர்.
அவர்களை தேடும் பணிகள் நேற்று முதல் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் கடற்தொழில் அமைச்சரின் பணிப்பின் பேரில் கடற்படையினர் தமது படகுகளில் நயினாதீவு மற்றும் அதனை அண்டிய கடற்பரப்புகளில் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்த நிலையில், குறித்த மீனவர்களை கண்டுபிடித்து பாதுகாப்பாக கரைக்கு அழைத்து வந்துள்ளனர்.
மீட்கப்பட்ட மீனவர்கள் இன்றைய தினம் பாதுகாப்பாக குறிகட்டுவான் இறங்கு துறைக்கு அழைத்து வரப்பட்டு , அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த மீட்பு நடவடிக்கையில் பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனும் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
-யாழ். நிருபர் பிரதீபன்-