← முகப்பு செய்திகள்

Eng vs NZ 1st test England Beat New Zealand By 115 Runs

🕐 07 Jun 2026 📂 செய்திகள் 8 பார்வைகள்
Eng vs NZ 1st test England Beat New Zealand By 115 Runs

லண்டன்: நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 115 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. மழையினால் அவ்வப்போது பாதிக்கப்பட்ட இந்தப் போட்டியில், இங்கிலாந்து அணி நியூசிலாந்தை 115 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 140 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஹாரி புரூக் 56 ரன்கள் எடுத்தார். பின்னர் தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணி, இங்கிலாந்தின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் 113 ரன்களுக்குச் சுருண்டது.

இங்கிலாந்து தரப்பில் ஆலி ராபின்சன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 27 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி, அறிமுக வீரர் எமிலியோ கே (Emilio Gay) எடுத்த 57 ரன்கள் மற்றும் ஜேமி ஸ்மித்தின் (39) பொறுப்பான ஆட்டத்தால் 226 ரன்கள் சேர்த்தது. நியூசிலாந்து தரப்பில் நாதன் ஸ்மித் அபாரமாகப் பந்துவீசி 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

IND vs AFG: அடுத்த ஸ்டார் கிடைச்சிட்டாரு! அறிமுக போட்டியில் முதல் ஓவரிலே மானவ் சுதர் விக்கெட் வீழ்த்தி அபாரம்

254 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நியூசிலாந்து அணி, இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சில் நிலைகுலைந்தது. தொடக்க வீரர் டாம் லாதம், கேன் வில்லியம்சன் போன்ற முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கிளென் பிலிப்ஸ் மட்டும் ஓரளவு போராடி 44 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் நியூசிலாந்து அணி 138 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இங்கிலாந்து தரப்பில் கஸ் அட்கின்சன் மற்றும் ஆலி ராபின்சன் ஆகியோர் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவினர். லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 150-வது டெஸ்ட் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.

IND vs AFG: வலுவான நிலையில் இந்தியா.. ஆப்காகிஸ்தான் திணறல்.. 3 நாளில் முடியுமா ஆட்டம்?

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் தனது நிலையை வலுப்படுத்தியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜூன் 17-ம் தேதி ஓவல் மைதானத்தில் தொடங்க உள்ளது.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net