← முகப்பு செய்திகள்

IND vs AFG: Despite a stellar IPL 2026 season and a century

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 34 பார்வைகள்
IND vs AFG: Despite a stellar IPL 2026 season and a century

டெல்லி: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெற உள்ள ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட நிலையில், நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் மீண்டும் ஒருமுறை திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டுள்ளது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடைசியாக விளையாடிய ஒருநாள் போட்டியில் சதம் விளாசி ஆட்டநாயகன் விருது பெற்ற வீரருக்கு, அணியில் இடம் கிடைக்காதது தேர்வுக் குழுவின் பாரபட்சமான முடிவைக் காட்டுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ஜூன் 14, 17 மற்றும் 20 ஆகிய தேதிகளில் தர்மசாலா, லக்னோ மற்றும் சென்னையில் 3 ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. இதில் இஷான் கிஷன் மீண்டும் அழைக்கப்பட்டுள்ள நிலையில், சஞ்சு சாம்சனின் பெயர் விடுபட்டுள்ளது.

Sanju Samson Dropped for Afghanistan ODIs Fans Outraged After Star Batter s IPL 2026 Form

சஞ்சு சாம்சன் கடைசியாக 2023 டிசம்பரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடினார். அந்தப் போட்டியில் 108 ரன்கள் குவித்து அசத்திய அவர், இந்திய அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற முக்கியக் காரணமாக இருந்தார். அந்தப் போட்டியின் ஆட்டநாயகன் விருதையும் அவரே வென்றார். ஒருநாள் போட்டிகளில் இதுவரை 14 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள சஞ்சு சாம்சன், 56.6 என்ற அபாரமான சராசரியைக் கொண்டுள்ளார். இதில் 1 சதம் மற்றும் 3 அரைசதங்கள் அடங்கும்.

2026 டி20 உலகக் கோப்பையில் சிறப்பாகச் செயல்பட்ட சஞ்சு சாம்சன், தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் 2026 தொடரிலும் மிகச்சிறந்த ஃபார்மில் உள்ளார். இந்த சீசனில் இதுவரை 13 இன்னிங்ஸ்களில் விளையாடி 2 சதங்களுடன் 477 ரன்கள் குவித்துள்ளார். ஆரஞ்சு தொப்பிக்கான ரேஸில் முன்னிலையில் இருக்கும் ஒரு வீரருக்கு, ஒருநாள் அணியில் இடம் வழங்காதது ரசிகர்களைக் கொதிப்படையச் செய்துள்ளது.

சுப்மன் கில் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஒருநாள் அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல் போன்ற சீனியர் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஸ்ரேயாஸ் ஐயர் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஹர்திக் பாண்டியா தனது உடல் தகுதியை நிரூபிக்கும் பட்சத்தில் அணியில் இணைவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு வலிமையான அணியில், தகுதியிருந்தும் சஞ்சு சாம்சன் மீண்டும் புறக்கணிக்கப்பட்டது இந்திய கிரிக்கெட்டில் விவாதத்தை கிளப்பியுள்ளது.

IND vs AFG டெஸ்ட் அணி அறிவிப்பு.. பண்ட்டுக்கு ஆப்பு.. ராகுலுக்கு ஜாக்பாட்.. பும்ராவுக்கு ஓய்வு

ஆப்கானிஸ்தான் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி: சுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), கே.எல்.ராகுல், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, பிரின்ஸ் யாதவ், குர்னூர் ப்ரார், ஹர்ஷ் துபே.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net