← முகப்பு பதிவு

யாழ்ப்பாண மாவட்டச் செயலக முன்றலில் தமது காணிகளை விடுவிக்கக் கோரி அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட மயிலிட்டி

🕐 6 மணி நேரம் முன்னர் 📂 பதிவு 6 பார்வைகள்
யாழ்ப்பாண மாவட்டச் செயலக முன்றலில் தமது காணிகளை விடுவிக்கக் கோரி அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட மயிலிட்டி
வலி.வடக்கில் அதிஉயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்ட வர்த்தமானியை மீள பெற கோரிக்கை

யாழ்ப்பாண மாவட்டச் செயலக முன்றலில் தமது காணிகளை விடுவிக்கக் கோரி அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழுவினர் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை நேரில் சந்தித்துத் தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவை உத்தியோகபூர்வமாகக் கையளித்தனர்.

1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி இடம்பெயர்ந்த தமது மக்கள், 36 வருடங்கள் நிறைவடைந்த நிலையிலும் இன்னும் அகதிகளாகவே வாழ்ந்து வருவதாகத் தமது மனுவில் சுட்டிக்காட்டியுள்ள மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழுவினர், ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு செல்வதற்காக இரண்டு பிரதான கோரிக்கைகளைத் தமது மனுவில் முன்வைத்துள்ளனர்.

2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிஉயர் பாதுகாப்பு வலயம் தொடர்பான வர்த்தமானி (இல. 1810) முழுமையாக நீக்கப்பட வேண்டும்.

மயிலிட்டியில் தொடர்ச்சியாக நிலம் மீட்பதற்காக அறவழியில் போராடி வரும் ஜே/248, ஜே/251, ஜே/255 மற்றும் ஜே/246 ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளுக்குட்பட்ட மக்களின் காணிகள் முதற்கட்டமாக விடுவிக்கப்பட வேண்டும். ஆகிய இந்தக் கோரிக்கைகள் அடங்கிய மனுவைப் பெற்றுக்கொண்ட ஆளுநர், உரிய துரித நடவடிக்கைகளுக்காக அதனை உடனடியாக ஜனாதிபதி அனுப்பி வைத்துள்ளார்.

மேலும் செய்திகள்
பதிவு
பல உக்ரேனிய நகரங்கள் மீது ரஷ்யா இரவோடு இரவாக நடத்திய பெரும் ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து,
3 மணி நேரம் முன்னர்
பதிவு
நோர்வேயின் பட்டத்து இளவரசியின் மகன், இரண்டு பாலியல் பலாத்காரக் குற்றங்களில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதை அடு
5 மணி நேரம் முன்னர்
பதிவு
நெடுதீவுக்கான பயணிகள் சேவையில் ஈடுபட்டு வந்த வடதாரகை படகு , திருத்த வேலைகள் நிறைவடைந்த நிலையில்
11 மணி நேரம் முன்னர்
பதிவு
யாழ்ப்பாணம் தீவகம் பகுதியில் மாடுகளை களவாடி சட்டவிரோதமாக இறைச்சியாக்குதல் , வீடுகளை உடைத்து திருட்டில் ஈடுபடுத
12 மணி நேரம் முன்னர்
பதிவு
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே ஒரு சமாதான ஒப்பந்தம் எட்டப்பட்டு, அது தற்போது நடைமுறைக்கு வந்துவிட்டது என்
14 மணி நேரம் முன்னர்
பதிவு
சுரேஷ் சலேவின் விவகாரத்தில் தற்போதைய அரசு முற்றிலும் நீதியான முறையில் சட்டங்களை நடைமுறைப்படுத்தத வேண்டும் என்ற
1 நாள்கள் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net