நெடுதீவுக்கான பயணிகள் சேவையில் ஈடுபட்டு வந்த வடதாரகை படகு , திருத்த வேலைகள் நிறைவடைந்த நிலையில் , இன்றைய தினம் திங்கட்கிழமை முதல் மீண்டும் சேவையில் இணைக்கப்பட்டுள்ளது.
குறிகாட்டுவான் – நெடுந்தீவுக்கு இடையில் சேவையில் ஈடுபட்டு வந்த வடதாரகை , நெடுந்தாரகை மற்றும் குமுதினி ஆகிய மூன்று படகுகளும் பழுதடைந்தமையால் நெடுந்தீவுக்கான பயணத்தில் பெரும் நெருக்கடி ஏற்பட்டது.
அந்நிலையில் , குறித்த படகுகளை துரிதமாக திருத்தி மீண்டும் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
அதில் வடதாரகையின் திருத்த பணிகள் நிறைவடைந்த நிலையில் , இன்று முதல் பயணிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, நெடுந்தாரகை படகு தற்போது காங்கேசன்துறை (KKS) துறைமுகத்தில் திருத்தப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. அதன் பணிகள் நிறைவடைந்தவுடன், அந்தப் படகும் விரைவில் மீண்டும் சேவையில் இணைக்கப்படும்
மேலும், குமுதினி படகு இயந்திரக் கோளாறு காரணமாக சேவையிலிருந்து விலக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதன் இயந்திர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
திருத்தப் பணிகள் நிறைவடைந்தவுடன், குமுதினி படகும் மக்களின் பயன்பாட்டிற்காக மீண்டும் சேவையில் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.