← முகப்பு செய்திகள்

தொழிலதிபர் கவுதம் அதானி மற்றும் அவரது மருமகன் சாகர் அதானி ஆகியோருக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 50 பார்வைகள்
தொழிலதிபர் கவுதம் அதானி மற்றும் அவரது மருமகன் சாகர் அதானி ஆகியோருக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து
அதானி மீதான குற்ற வழக்குகள் ரத்து – அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

தொழிலதிபர் கவுதம் அதானி மற்றும் அவரது மருமகன் சாகர் அதானி ஆகியோருக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து குற்ற வழக்குகளையும் அமெரிக்க நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் சூரிய ஒளி மின்சக்தி திட்டங்களை பெற இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக அதானி குழுமம் மீது அமெரிக்கா வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததாலும், அமெரிக்காவுடன் நேரடித் தொடர்பு இல்லாததாலும் வழக்கை மேலும் நடத்தப் போவதில்லை என அமெரிக்க அரசு வக்கீல்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதையடுத்து, இந்த வழக்கை நிரந்தரமாக தள்ளுபடி செய்வதாக அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இனி இந்த வழக்கை மீண்டும் தொடர முடியாது. முன்னதாக, அமெரிக்க செக்யூரிட்டிஸ் வாரியத்திற்கு 6 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதம் செலுத்த அதானி ஒப்புக்கொண்டார். மேலும் ஈரான் மீதான பொருளாதார தடையை மீறிய புகாரில் அதானி குழுமம் 275 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதம் செலுத்தி ஒப்படைப்பு செய்தது. அதானி தரப்பு வக்கீல்கள், இந்த விவகாரம் முற்றிலும் இந்தியாவிற்குள் நடந்தது என்றும், அமெரிக்க சட்டங்கள் இதில் தலையிட முடியாது என்றும் வாதிட்டனர். நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மூலம் அதானி குழுமத்திற்கு சர்வதேச அளவில் இருந்த முட்டுக்கட்டைகள் தற்போது முழுமையாக நீங்கியுள்ளன.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net