← முகப்பு செய்திகள்

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் குற்றவாளியென நிரூபிக்கப்பட்ட பௌத்த பிக்கு ஒருவருக்கு 24 ஆண்டுகள் கடுழியச்

🕐 1 மணி நேரம் முன்னர் 📂 செய்திகள் 4 பார்வைகள்
சிறுவர் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் குற்றவாளியென நிரூபிக்கப்பட்ட பௌத்த பிக்கு ஒருவருக்கு 24 ஆண்டுகள் கடுழியச்
சிறுவர் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் தேரருக்கு 24 ஆண்டுகள் கடுழியச் சிறைத்தண்டனை!

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் குற்றவாளியென நிரூபிக்கப்பட்ட பௌத்த பிக்கு ஒருவருக்கு 24 ஆண்டுகள் கடுழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வீட்டு வறுமை காரணமாக சிறந்த கல்வியை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் கலென்பிந்துனுவெவ பிரதேசத்திலுள்ள விகாரையொன்றில் ஒப்படைக்கப்பட்ட 10 வயது சிறுவனைத் கடும் பாலியல் துர்நடத்தைகளுக்கு உட்படுத்தியதாக அந்த விகாரையின் விகாராதிபதி மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

குறித்த வழக்கு அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றபோது குறித்த பிக்குவிற்கு 24 ஆண்டுகள் கடுழியச் சிறைத்தண்டனை விதித்து பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு 5 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறும் உத்தரவிட்டுள்ளது.

அவ்வாறு இழப்பீட்டைச் செலுத்தத் தவறினால் மேலதிகமாக 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

எதிர்மனுதாரரான பிக்கு நீதிமன்றத்தில் முன்னிலையாகாது தலைமறைவாகியிருந்த நிலையில் அவர் இல்லாத நிலையிலேயே இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. தற்போது அந்த பிக்குவைக் கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இளம் பௌத்த பிக்குவாக விகாரையொன்றில் ஒப்படைக்கப்பட்ட முதலாவது நாளிலேயே சிறுவன் ஒருவரைப் பாலியல் துர்நடத்தைகளுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட கல்நேவ பிரதேசத்தைச் சேர்ந்த பௌத்த பிக்கு ஒருவருக்கும் அநுராதபுரம் சிறுவர் குற்றங்கள் தொடர்பான விசேட மேல் நீதிமன்றம் அண்மையில் தண்டனை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்
செய்திகள்
India vs Afghanistan Test: India targets a massive first-innings total against Afghanistan
07 Jun 2026
செய்திகள்
சட்டம் – ஒழுங்கு தொடர்பான பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிய தமிழகம் முழு வதும் ரோந்துப் பணிகள்
1 மணி நேரம் முன்னர்
செய்திகள்
தமிழக அமைச்​சரவை கூட்​டத்​தில் 436 திட்​டங்​களை 90 நிமிடத்​தில் ஆலோ​சித்​தது எப்​படி என்​பது குறித்து அமைச்​சர
1 மணி நேரம் முன்னர்
செய்திகள்
டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சி நடத்திய ஒருநாள் போராட்டம் என்ன பலன் தந்தது?
1 மணி நேரம் முன்னர்
செய்திகள்
பாராளுமன்றத்துக்குள் இருக்கும் ஏனைய அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன
1 மணி நேரம் முன்னர்
செய்திகள்
உருளைக்கிழங்கு சாப்பிட்டால் வாயுத்தொல்லை அதிகரிக்கும் என்பது உண்மையா?
1 மணி நேரம் முன்னர்
முக்கிய செய்திகள்
1
India vs Afghanistan Test: India targets a massive first-innings
2
Today Rasi Palan: இங்கு 2026 ஜூன் 07 ஆம் தேதியான இன்று மேஷம், ரிஷ
3
மத்திய பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள முக்கிய துறைமுகம்
தலையங்கம் · 31 நிமிடங்கள் முன்னர்
4
சட்டம் – ஒழுங்கு தொடர்பான பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிய தமிழக
செய்திகள் · 1 மணி நேரம் முன்னர்
5
தமிழக அமைச்​சரவை கூட்​டத்​தில் 436 திட்​டங்​களை 90 நிமிடத்​தில் ஆ
செய்திகள் · 1 மணி நேரம் முன்னர்
6
சிறுவர் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் குற்றவாளியென நிரூபிக்கப்பட்ட
செய்திகள் · 1 மணி நேரம் முன்னர்
7
டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சி நடத்திய ஒருநாள் போராட்டம் என்ன பலன
செய்திகள் · 1 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net