← முகப்பு செய்திகள்

தமிழக அமைச்​சரவை கூட்​டத்​தில் 436 திட்​டங்​களை 90 நிமிடத்​தில் ஆலோ​சித்​தது எப்​படி என்​பது குறித்து அமைச்​சர

🕐 2 மணி நேரம் முன்னர் 📂 செய்திகள் 6 பார்வைகள்
தமிழக அமைச்​சரவை கூட்​டத்​தில் 436 திட்​டங்​களை 90 நிமிடத்​தில் ஆலோ​சித்​தது எப்​படி என்​பது குறித்து அமைச்​சர
436 திட்டங்களை 90 நிமிடத்தில் ஆலோசித்தது எப்படி? – அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்

தமிழக அமைச்​சரவை கூட்​டத்​தில் 436 திட்​டங்​களை 90 நிமிடத்​தில் ஆலோ​சித்​தது எப்​படி என்​பது குறித்து அமைச்​சர் அருண்​ராஜ் விளக்​கம் அளித்​துள்​ளார்.

சுகா​தா​ரத் துறை அமைச்​சர் அருண்​ராஜ் கோவை​யில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் தெரி​வித்​த​தாவது: தமிழகத்தை பொறுத்​தவரை அரசு மருத்​து​வ​மனை​களில் மருத்​து​வர்​கள் பற்​றாக்​குறை மிகக் குறைவு. ஆனால், செவிலியர் பற்​றாக்​குறை இருக்​கிறது. அந்த நிலை விரை​வில் சரி செய்​யப்​படும்.

அமைச்சரவை கூட்டத்தில் 436 திட்​டங்​களை 90 நிமிடத்​தில் ஆலோ​சிக்க முடி​யாது. அதேநேரம் திட்​டங்​களுக்​கான விவரங்​கள் கையேடு​களில் இருக்​கின்​றன. அதை பார்த்து எப்​படி செய்ய வேண்​டும் என சொல்லி இருக்​கிறோம். மருத்​துவ படிப்​பில் அரசுப் பள்ளி மாணவர்​களுக்​கான 7.5 சதவீத இடஒதுக்​கீட்டை உயர்த்​து​வது குறித்து முதல்​வரிடம் பேசி முடிவு செய்​யப்​படும்.

பல்​வேறு கட்​சிகளில் இருந்​தும் தவெக​வுக்கு வந்து கொண்டு இருக்​கின்​றனர். அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி எடுத்த முடிவு​கள் தவறாகத்​தான் போயிருக்​கின்​றன. முதல்​வர் விஜய்க்கு ரசிக​ராக யாரும் ஓட்டு போட​வில்​லை. அவரை தலை​வ​ராக ஏற்​றுக்கொண்​ட​தால் தான் ஓட்டு போட்டு இருக்​கிறார்​கள். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net