← முகப்பு செய்திகள்

இலங்கையின் வருடாந்த தேன் உற்பத்தியை 50 மெற்றிக் தொன்னிலிருந்து 200 மெற்றிக் தொன்னாக அதிகரிக்கும் நோக்கில்

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 48 பார்வைகள்
இலங்கையின் வருடாந்த தேன் உற்பத்தியை 50 மெற்றிக் தொன்னிலிருந்து 200 மெற்றிக் தொன்னாக அதிகரிக்கும் நோக்கில்
தேன் உற்பத்தியை 200 மெற்றிக் தொன்னாக உயர்த்த விவசாயத் திணைக்களம் திட்டம்

இலங்கையின் வருடாந்த தேன் உற்பத்தியை 50 மெற்றிக் தொன்னிலிருந்து 200 மெற்றிக் தொன்னாக அதிகரிக்கும் நோக்கில் விசேட திட்டமொன்றை விவசாயத் திணைக்களம் ஆரம்பித்துள்ளது.

உலக தேனீக்கள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொண்ட திணைக்கள பணிப்பாளர் நாயகம் துஷார விக்ரம ஆராச்சி, நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தேன் உற்பத்தியை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

உலக உணவு உற்பத்தியில் தேனீக்கள் முக்கிய பங்காற்றுவதாகவும், அவற்றின் எண்ணிக்கை குறைவது உணவுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net