← முகப்பு செய்திகள்

Women T20 World Cup 2026: Former England captain Nasser Hussain tips defending

🕐 14 Jun 2026 📂 செய்திகள் 8 பார்வைகள்
Women T20 World Cup 2026: Former England captain Nasser Hussain tips defending

லண்டன்: மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் குரூப் ஏ பிரிவில் இந்தியா சிக்கலான வகையில் இடம் பெற்று இருக்கிறது. இந்த நிலையில் குரூப் ஏ பிரிவில் இருந்து அரையிறுதிக்கு தகுதி பெறும் 2 பலம் வாய்ந்த அணிகள் எவை என்பது குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் உசேன் கணித்துள்ளார்.

இத்தொடரின் குரூப் ஏ பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய 3 வலுவான அணிகள் இடம்பெற்றுள்ளன. ஆனால், இந்த மூன்று அணிகளில் இரண்டு மட்டுமே அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற நிலை உள்ளது. இது இந்திய அணிக்கு அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

Women T20 World Cup 2026 Nasser Hussain Predicts Semifinalists from Group A

இந்த 3 அணிகளில் இருந்து அரையிறுதிக்குச் செல்லும் 2 அணிகளைத் தேர்ந்தெடுப்பது கடினம் என்றாலும், ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேற அதிக வாய்ப்புள்ளதாக நாசர் உசேன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நாசர் உசேன் பேசுகையில், "என்னைக் கேட்டால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நான் எப்போதும் பந்தயம் கட்ட மாட்டேன். கடந்த காலங்களில் அவர்கள் காட்டிய ஆதிக்கத்தின் அடிப்படையில் நிச்சயம் அரையிறுதிக்குத் தகுதி பெறுவார்கள். அவர்கள் மிகவும் பலமான அணியாகத் திகழ்கிறார்கள்" என்றார்.

2வது அணி குறித்து அவர் கூறுகையில், "அடுத்ததாக இந்திய அணியைத் தேர்ந்தெடுப்பேன். ஏனெனில் கடந்த ஆண்டு நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. பெரிய மைதானங்களில், அழுத்தமான சூழ்நிலைகளில் சிறப்பாக விளையாடி வெல்லும் திறமை இந்திய அணிக்கு உள்ளது. இதனால் இந்தியாவும் அரையிறுதிக்கு முன்னேறும்" என்றார்.

அதே நேரத்தில் தென்னாப்பிரிக்க அணியையும் எளிதாகக் குறைத்து மதிப்பிட முடியாது என அவர் எச்சரித்துள்ளார். லாரா வோல்வார்ட் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணியில் மரிசான் காப், ஷப்னிம் இஸ்மாயில் போன்ற அனுபவம் வாய்ந்த வீராங்கனைகள் உள்ளனர். அண்மையில் இந்தியாவுக்கு எதிரான இருதரப்பு டி20 தொடரை தென்னாப்பிரிக்கா 4-1 என்ற கணக்கில் வென்றிருந்தது. இதனால், இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று நாசர் உசேன் குறிப்பிட்டுள்ளார்.

6 மாசம் கழித்து ஆட வந்த ரோஹித் சர்மா ஆனால்.. இப்படியா சொதப்புறது.. ‘ஹிட்மேன்’ மீது அழுத்தம்?

ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி, தங்களது முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை பர்மிங்காமில் ஞாயிற்றுக்கிழமை எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net