← முகப்பு செய்திகள்

IND vs AFG: Afghanistan opener Rahmanullah Gurbaz smashes a historic 48-ball century

🕐 14 Jun 2026 📂 செய்திகள் 11 பார்வைகள்
IND vs AFG: Afghanistan opener Rahmanullah Gurbaz smashes a historic 48-ball century

தர்மசாலா: இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிரடி சதம் விளாசிய ஆப்கானிஸ்தான் வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ், பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடியின் 21 ஆண்டுகால உலக சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை வெறும் 3 பந்துகளில் கோட்டை விட்டார். மேலும், இந்தப் போட்டியில் குர்பாஸ் சதம் அடித்தும் ஆப்கானிஸ்தான் அணி தோல்வி அடைந்தது.

தர்மசாலாவில் நேற்று நடைபெற்ற போட்டியில் மழையின் காரணமாக ஆட்டம் தலா 25 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணிக்கு குர்பாஸ் அசுர வேகத்தில் அதிரடி தொடக்கம் தந்தார். அவர் வெறும் 48 பந்துகளில் தனது 9வது ஒருநாள் சதத்தை நிறைவு செய்தார். இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக சதம் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்தார். இதற்கு முன் முகமது ஷாசாத் (72 பந்துகள்) வைத்திருந்த சாதனையை அவர் முறியடித்துள்ளார்.

IND vs AFG Rahmaullah Gurbaz Misses Shahid Afridi s 21-Year World Record by Just 3 Balls After Century

இத்தகைய பிரம்மாண்ட சாதனையைப் படைத்த போதிலும், இந்தியாவுக்கு எதிராக அதிவேகமாக ஒருநாள் சதம் அடித்த ஷாகித் அப்ரிடியின் உலக சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை 3 பந்துகளில் குர்பாஸ் தவறவிட்டார். கடந்த 2005ஆம் ஆண்டு கான்பூரில் நடந்த இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அப்ரிடி 45 பந்துகளில் சதம் விளாசி இன்றளவும் முதலிடத்தில் உள்ளார்.

ஷாகித் அப்ரிடி (பாகிஸ்தான்) – 45 பந்துகள் (கான்பூர், 2005)
ரஹ்மானுல்லா குர்பாஸ் (ஆப்கானிஸ்தான்) – 48 பந்துகள் (தர்மசாலா, 2026)
ஜேம்ஸ் பால்க்னர் (ஆஸ்திரேலியா) – 57 பந்துகள் (பெங்களூரு, 2013)
ஏபி டி வில்லியர்ஸ் (தென்னாப்பிரிக்கா) – 57 பந்துகள் (மும்பை, 2015)
மைக்கேல் பிரேஸ்வெல் (நியூசிலாந்து) – 57 பந்துகள் (ஹைதராபாத், 2023)

இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 26 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது, கேப்டன் ஹஸ்மத்துல்லா ஷாஹிதியுடன் (27) இணைந்து குர்பாஸ் 4வது விக்கெட்டுக்கு 118 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை மீட்டார். மொத்தம் 51 பந்துகளை சந்தித்த குர்பாஸ் 8 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்சர்கள் உட்பட 102 ரன்கள் எடுத்து நிதிஷ் குமார் ரெட்டி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

IND vs AFG: சுப்மன் கில் செயலால் கொந்தளித்த ரோஹித்.. ஆனால் ரீப்ளே பார்த்தபின் நடந்ததே வேறு!

குர்பாஸின் அதிரடி ஆட்டத்தையும் தாண்டி இந்திய அணி ஆப்கானிஸ்தானை 194 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது. அறிமுக ஸ்பின்னர் ஹர்ஷ் துபேயின் பந்துவீச்சில் ஷாஹிதி கொடுத்த கடினமான கேட்ச்சை ஸ்லிப்பில் நின்ற கேப்டன் சுப்மன் கில் ஒற்றைக் கையில் தாவிப் பிடித்து அசத்தினார். பின்னர் இந்திய அணி 195 ரன்கள் என்ற இலக்கை 22.5 ஓவர்களில் எட்டி வெற்றி பெற்றது. அதிவேக சதம் மற்றும் போட்டியில் தோல்வி என சதம் அடித்த குர்பாஸ்-க்கு ஏமாற்றங்களே மிஞ்சின.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net