← முகப்பு தமிழ்

யார் என்ன கூறினாலும், நீண்டகாலமாக நான் நன்கு அறிந்த அரச அதிகாரியான சுரேஷ் சலே என்பவர்

🕐 14 Jun 2026 📂 தமிழ் 4 பார்வைகள்

யார் என்ன கூறினாலும், நீண்டகாலமாக நான்

கொழும்பில் நேற்று ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்து அங்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.Geographic Reference

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்

யார் என்ன சொன்னாலும் நீண்டகாலமாக தனது பொறுப்புக்களைச் சரிவர நிறைவேற்றிய, நான் நன்கு அறிந்த ஒருவர்தான் இந்த சுரேஷ் சலே என்பவர். அவர் மிகவும் திறமையான, நேர்மையான ஓர் அதிகாரி. அவரைப் பற்றி இறுதித் தீர்ப்பு வழங்க என்னால் முடியாது.

ஆனால், அவர் ஒருபோதும் தவறிழைப்பார் என்று நான் நினைக்கவில்லை. அவர் அரசாங்கத்துக்கும், நாட்டுக்கும், மக்களுக்கும் மற்றும் தான் சத்தியப்பிரமாணம் செய்த அரசியலமைப்புக்கும் இணங்கவே கடமையாற்றினார் என்பதை நான் தெளிவாக அறிவேன். ஏனெனில், அவருடன் இருந்த ஏனைய குழுவினரையும் உயர்மட்ட அதிகாரிகளையும் யுத்தக் காலத்தில் நாங்கள் மிக நெருக்கமாகப் பழகியிருந்தோம்.

மேலும் கண்டறிக

Places of Worship

சினிமா விமர்சனம்

Christianity

எனவே, இவை குறித்து இன்னும் நடுநிலையாகவும் புத்திசாலித்தனமாகவும் சிந்திக்குமாறு நான் அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன். அனைத்துத் தரப்பிலிருந்தும் குழப்பங்களையோ, மோதல்களையோ ஏற்படுத்திக் கொள்ளாமல் செயற்பட வேண்டும் என்ற கோரிக்கையையே நாம் விடுக்க வேண்டியுள்ளது. எதற்கும் காரணங்களை உருவாக்கிக் கொள்ளவும்

முடியும், காரணங்கள் அமையவும் கூடும். ஆனால் சுரேஷ் சலே என்பவர் நேர்மையான, அர்ப்பணிப்புடன் கூடிய ஓர் அதிகாரி என்பதை நான் எந்த இடத்திலும் பயமின்றி கூறுவேன்.நான் இதுவரை இது குறித்துப் பேசவில்லை.

அவருடைய குடும்பம் மனைவியை பற்றியும் நான் நன்கறிவேன். அவர் ஒரு சிங்களப் பெண்ணையே திருமணம் செய்துள்ளார். அவருடைய தந்தையையும் நான் இருபது வருடங்களுக்கும் மேலாக அறிவேன். அவர் ஒரு நிர்வாக அதிகாரி. மிகவும் திறமையான, கண்ணியமான மனிதர்களாகவே அந்த குடும்பத்தினரை நான் அறிவேன்.

ஆனால், இவ்வாறான செயற்பாடுகளினால் எதிர்காலத்தில் அரச சேவையில் இணைவதற்கு எவரும் முன்வராமல் போகலாம். அரச சேவையில் இணைவதென்பது, பல நேரங்களில் சிறியதொரு தவறுக்காகவும் சிறைச்சாலையில் வதை படும் வேலை என்றே சிலர் நினைக்கத் தொடங்குவார்கள். எனவே, தயவுசெய்து இவ்வாறான சம்பவங்கள் குறித்து யாரும் மகிழ்ச்சியடைய வேண்டாம். நாம் இவற்றை மிகவும் நடுநிலையாகப் பார்க்கும் தரப்பினர். அதனால்தான், இந்த அரசாங்கம் இன்னும் நடுநிலையாகப் பேச்சுவார்த்தை நடத்தி காரியங்களை கையாள வேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்
📰
தமிழ்
பிரபாகரனின் மகன் குறித்து பேசும் ஹக்கீம், 1990 ஜூன் 11-ஐ மறந்துவிட்டாரா? – கலீலுர் ரஹ்மான்
14 Jun 2026
📰
தமிழ்
வெளிநாட்டு கடன் வழங்குநருக்கு திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் மூன்றாம் தரப்பினரால் மோசடி செய்யப
14 Jun 2026
📰
தமிழ்
அமெரிக்கா மற்றும் டெஹ்ரான் அமைதி ஒப்பந்தம் எட்டக்கூடிய தூரத்தில் உள்ளதாக சமிக்ஞை; ஆனால் இன்னும் கையெழுத்தாகவில
14 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
அசாமின் ஜோர்ஹட்டில் விமானப் படை போக்குவரத்து விமானம் ஏஎன்-32 விபத்துக்குள்ளானதில் விமானப் படையின் 5 வீரர்கள்
15 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
அமெரிக்காவின் வொஷிங்டன் டிசி நகரில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற கென்னடி கலை மைய கட்டிடத்தில் பொருத்தப்பட்டிருந
15 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
இந்திய விமானப்படைக்கு சொந்தமான AN-32 ரக போக்குவரத்து விமானம் ஒன்று அசாமில் உள்ள ஜோர்ஹாட் விமானப்படை
16 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net