யாழில் முதலாவது பன்னாட்டு தமிழிசை ஆய்வு மாநாடு ஆரம்பம்
முதலாவது பன்னாட்டு தமிழிசை ஆய்வு மாநாட்டின் இரண்டாவது நாள் நிகழ்வானது நேற்று (13) யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்வின்போது மங்கல விளக்கேற்றி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கலை நிகழ்வுகள் ஆரம்பமாகின.
இந்த மாநாட்டில் ஆய்வளிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. பின்னர் மாணவர்களது கலை நிகழ்வுகள் இடம்பெற்றன. இசைத் துறையின் வரலாற்றில் ஒரு மைக்கல்லாக இந்த முதலாவது பன்னாட்டு தமிழிசை ஆய்வு மாநாடு நடாத்தப்படுகின்றது.
கந்தையா கார்த்திகேசு நிதியத்தின் நிதிப் பங்களிப்புடன் இந்த ஆய்வு மாநாடானது நடைபெற்றுள்ளது.