← முகப்பு இன்றைய ராசிபலன்

Saturn Transit In Revati Nakshatra 2026: சனி பகவான் மே 17 ஆம் தேதி

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 இன்றைய ராசிபலன் 24 பார்வைகள்
Saturn Transit In Revati Nakshatra 2026: சனி பகவான் மே 17 ஆம் தேதி

Saturn Transit In Revati Nakshatra 2026: ஜோதிடத்தில் சனி பகவான் மிகவும் சக்தி வாய்ந்த கிரகங்களுள் ஒருவராக கருதப்படுகிறார். அதோடு இவர் நீதிமான் என்றும் அழைக்கப்படுகிறார். ஏனென்றால், இவர் ஒருவரது செயல்களுக்கு ஏற்ற பலன்களைத் தருகிறார். நவகிரகங்களிலேயே சனி மிகவும் மெதுவாக நகரக்கூடியவர். இவர் ஒரு ராசியில் சுமார் 2 1/2 ஆண்டுகள் வரை இருப்பார். அதேப் போல் ஒரு நட்சத்திரத்தில் 6 மாத காலம் வரை இருப்பார்.

இப்படி ஒரு ராசியிலும், நட்சத்திரத்திலும் நீண்ட காலம் சனி பகவான் இருப்பதால், அவரது தாக்கம் ஒருவரது வாழ்வில் சற்று அதிகமாக இருக்கும். அதுவும் சனி பகவானின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அந்த வகையில் சனி பகவான் மே 17 ஆம் தேதி ரேவதி நட்சத்திரத்திற்குள் நுழைந்தார்.

இந்த நட்சத்திரத்தில் சனி பகவான் அக்டோபர் 09 ஆம் தேதி வரை இருப்பார். இந்த ரேவதி நட்சத்திரத்தின் அதிபதி புதன். புதனின் நட்சத்திரத்திற்குள் சனி பகவான் சென்றிருப்பதால், அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளிலுமே காணப்படும். அதில் சிலருக்கு அதிர்ஷ்டமாகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்கலாம். இப்போது சனி நட்சத்திர பெயர்ச்சியால் எந்த ராசிக்கு எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.

மேஷம்

சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்கள் வேலை மற்றும் தொழில் ஆகிய இரண்டிலும் பெரிய மாற்றங்களை சந்திக்க நேரிடும். சிலர் செய்யும் வேலையை விட்டு, புதிய தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. ஏற்றுமதி இறக்குமதி தொடர்பான வணிகம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இருந்தாலும், ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

Saturn Transit In Revati Nakshatra 2026 Effects On 12 Zodiac Signs

ரிஷபம்

சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும். அதுவும் வருமானத்தில் உயர்வு ஏற்படும். நீண்ட கால ஆசைகள் நிறைவேறும். அரசு வேலை செய்பவர்களுக்கு நல்ல ஆதாயங்கள் கிடைக்கலாம். வெளிநாடு செல்லும் ஆசை இருந்தால், இக்காலத்தில் அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். முக்கியமாக சனி பகவானின் ஆசியால் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படக்கூடும்.

மிதுனம்

சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்கள் தொழில் வாழ்க்கையில் மாற்றங்களைக் காண்பார்கள். பணிபுரிபவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். அலுவலகத்தில் உங்களின் செயல்திறன் பாராட்டப்படும். வெளிநாட்டில் வேலை செய்வதற்கான வாய்ப்புக்கள் தேடி வரும். கூட்டு தொழில் மற்றும் திருமண வாழ்க்கையில் மனக்கசப்புகள் அதிகரிக்கும். எனவே சற்று நிதானத்தையும், பொறுமையையும் கடைப்பிடிக்க வேண்டும்.

கடகம்

கடக ராசிக்காரர்கள் சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் வேலையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் காண்பார்கள். வாழ்க்கையான புதிய திசையை நோக்கி செல்லும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடனான உறவு மோசமடையலாம். எனவே சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆன்மீகத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

Saturn Transit In Revati Nakshatra 2026 Effects On 12 Zodiac Signs

சிம்மம்

சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களின் வாழ்க்கை அக்டோபர் வரை சற்று நிலையற்றதாக இருக்கும். பல சவால்களை சந்திக்க நேரிடும். சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வருமான ஆதாரங்களில் மாற்றம் ஏற்படும். அதோடு தொழில் வாழ்க்கையிலும் ஒரு பெரிய மாற்றத்தைக் காணக்கூடும். இருப்பினும், நிதி நிலைமை நிலையற்றதாகவே இருக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு சனியின் நட்சத்திர பெயர்ச்சியானது நன்மைகளைத் தரும். வாழ்வில் நேர்மறையான தாக்கம் ஏற்படும். வியாபாரிகளுக்கு முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். மொத்தத்தில் தொழில் மற்றும் வருமானத்தில் நல்ல வளர்ச்சியைக் காணக்கூடும்.

துலாம்

சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்கள் அனைத்து துறைகளிலும் நல்ல வெற்றியையும், வளர்ச்சியையும் காண்பார்கள். வேலை தொடர்பான பயணங்களை அதிகம் மேற்கொள்ள நேரிடும். இந்த பயணங்களால் நல்ல நிதி ஆதாயம் கிடைப்பதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. வெளிநாட்டுடன் தொடர்புடைய தொழிலை செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

Saturn Transit In Revati Nakshatra 2026 Effects On 12 Zodiac Signs

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். சிலர் தங்கள் பொழுதுபோக்கை தொழிலாக மாற்றிக் கொள்ள வாய்ப்புள்ளது. போட்டி தேர்வுகளில் பங்கு கொண்டால் நல்ல வெற்றி கிடைக்கும். இருப்பினும் நிறைய செலவுகளை சந்திக்க நேரிடும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு ஏற்கனவே சனியின் தாக்கம் இருப்பதால், வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்படலாம். சிலருக்கு தொழில் மாற்றம் அல்லது இடமாற்றத்திற்கான வாய்ப்புக்களும் உள்ளன. இக்காலத்தில் சூழ்நிலைகளை ஏற்றுக் கொண்டு நடப்பது நல்ல பலன்களைத் தரும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு சனியின் நட்சத்திர பெயர்ச்சியானது மிகவும் சாதகமானதாக இருக்கம். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். செலவுகளை அதிகமாக சந்தித்தாலும், இக்காலத்தில் புதிய முயற்சிகளை மேற்கொண்டு, அதில் வெற்றிகளையும், சாதனைகளையும் புரிவார்கள்.

Saturn Transit In Revati Nakshatra 2026 Effects On 12 Zodiac Signs

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் சில விஷங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏற்கனவே ஏழரை சனி நடப்பதால், மன அழுத்தம் அதிகரிக்கலாம். மேலும் இப்பெயர்ச்சியானது மனதில் ஒருவித பாதுகாப்பின்மையையும், குழப்பத்தையும் ஏற்படுத்தும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். திடீர் நிதி ஆதாயங்களும், பதவி உயர்வும் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

மீனம்

சனி நட்சத்திர பெயர்ச்சியால் மீன ராசிக்காரர்கள் நன்மைகளைப் பெறுவார்கள். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வேலையில் மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. ஏழரை சனி நடந்து வருவதால், தொழில், உறவுகள் மற்றும் மனநிலையில் அழுத்தத்தை ஏற்படுத்தும். உறவுகளில் விரிசல் ஏற்படலாம். எனவே பொறுமையையும், நிதானத்தையும் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net