← முகப்பு இன்றைய ராசிபலன்

Baba Vanga Predictions 2026: 2026 ஆம் ஆண்டின் முதல் பாதி முடிந்து இரண்டாம் பாதியில்

🕐 07 Jun 2026 📂 இன்றைய ராசிபலன் 6 பார்வைகள்
Baba Vanga Predictions 2026: 2026 ஆம் ஆண்டின் முதல் பாதி முடிந்து இரண்டாம் பாதியில்

Baba Vanga Predictions 2026: உலகில் எதிர்காலத்தைக் கணித்துக் கூறும் ஏராளமான தீர்க்கத்தரசிகள் அல்லது ஜோதிடர்கள் உள்ளனர். அதில் சிலர் உலகளவில் மிகவும் பிரபலமானவர்களாக இருப்பர். அப்படி மிகவும் பிரபலமான ஒரு தீர்க்கத்தரசி தான் பாபா வாங்கா. இவர் பல்கேரியாவைச் சேர்ந்த பார்வையற்ற ஜோதிடர் ஆவார்.

இவருக்கு சிறு வயதில் ஒரு விபத்தின் போது கண் பார்வை பறிபோனது. அதன் பின் அவருக்கு கிடைத்த ஒரு ஆற்றல் தான் எதிர்காலத்தை கணித்து கூறும் திறன். இதுவரை இவர் கணித்த பல விஷயங்கள் நடந்தேறியுள்ளன. ஆரம்பத்தில் இவரது கணிப்புக்களை பலரும் புறக்கணித்தனர். ஆனால் அதன் பின் இவரது கணிப்புகள் நடக்கும் போது பலரும் இவரது கணிப்புக்களை தெரிந்து கொள்ள ஆர்வம் கொள்கின்றனர்.

இந்த வகையில் 2026 ஆம் ஆண்டின் முதல் பாதி முடிந்து இரண்டாம் பாதியில் நுழையவுள்ளோம். இந்த ஆண்டின் கடைசி 6 மாதங்கள் தொடர்பான பாபா வாங்காவின் கணிப்புக்கள் இணையத்தில் பரவி வருகின்றன. அந்த கணிப்பில் 2026 ஜூன் முதல் டிசம்பர் வரையிலான காலம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்க போவதாகவும், 5 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வரராகும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம். உங்கள் ராசியும் இதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

Baba Vanga Predictions 2026 Next 6 Months Will Be Lucky For These Zodiac Signs

ரிஷபம்

பாபா கணிப்புப்படி, ரிஷப ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதி நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். நீண்ட நாள் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். நீண்ட கால முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகலாம். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போனற்வை கிடைக்கலாம். வணிகர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கலாம். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கலாம். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கவும் வாய்ப்புள்ளது.

Baba Vanga Predictions 2026 Next 6 Months Will Be Lucky For These Zodiac Signs

சிம்மம்

பாபா வாங்காவின் கணிப்புப்படி, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதி சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் திறமையை முழுமையாக நிரூபிக்க வாய்ப்பு கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் தலைமைப்பண்புகள் சிறப்பாக இருக்கும். உயர் அதிகாரிகளிடம் இருந்து பாராட்டைப் பெறுவீர்கள். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கலாம். வணிகர்களுக்கு புதிய திட்டங்கள் கிடைக்கலாம். நிதி நிலைமை வலுவடைய வாய்ப்புள்ளது. நற்பெயர் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. உங்களின் கருத்துக்கள் மதிக்கப்படும். முக்கியமாக எதிர்பாராத அளவில் திடீரென்று செல்வம் குவியும்.

Baba Vanga Predictions 2026 Next 6 Months Will Be Lucky For These Zodiac Signs

விருச்சிகம்

பாபா வாங்காவின் கணிப்புப்படி, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதி விருச்சிக ராசிக்காரர்களின் துணிச்சலான முடிவுகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். வியாபாரத்தில் எடுக்கப்படும் சில முக்கியமான முடிவுகள் நல்ல லாபத்தைத் தரும். முதலீடுகளில் இருந்தும் லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. சிலருக்கு புதிய தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். நிதி நிலைமை மேம்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக இக்காலத்தில் முடிவடையும்.

Baba Vanga Predictions 2026 Next 6 Months Will Be Lucky For These Zodiac Signs

மகரம்

பாபா வாங்காவின் கணிப்புப்படி, 2026 ஆம் ஆண்டின் கடைசி பாதியில் மகர ராசிக்காரர்களின் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். ஒவ்வொரு முயற்சிகளிலும் நேர்மறையான பலன்களைப் பெறக்கூடும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். ஒரு நிலையான மற்றும் பிடித்த வேலை கிடைக்கலாம். திட்டங்கள் ஒவ்வொன்றும் வெற்றிகரமாக எதிர்பார்த்தவாறு நடக்கும். வீட்டு சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். நிதி நிலைமை உயரும்.

Baba Vanga Predictions 2026 Next 6 Months Will Be Lucky For These Zodiac Signs

கும்பம்

பாபா வாங்காவின் கணிப்புப்படி, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதி கும்ப ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். வெற்றிகள் குவியும். ஐடி துறையில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும். புதிய நட்புகளால் எதிர்காலத்தில் நல்ல பலன் கிடைக்கும். நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. சிலருக்கு திடீரென்று எதிர்பார்த்த வேலை கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும் மற்றும் முன்னேற்றத்திற்கான புதிய பாதை திறக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net