← முகப்பு இன்றைய ராசிபலன்

Rahu Transit in May 2026: List of Three Lucky Zodiac Signs: ராகுவின்

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 இன்றைய ராசிபலன் 120 பார்வைகள்
Rahu Transit in May 2026: List of Three Lucky Zodiac Signs: ராகுவின்

ஜோதிட சாஸ்திரத்தில் அனைத்து கிரகங்களும் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு தங்களின் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றுகின்றன. ஜோதிடத்தில் ராகு சக்திவாய்ந்த நிழல் கிரகமாக கருதப்படுகிறது. ராகு பொதுவாக எதிர்மறையான கிரகமாக கருதப்படுகிறார், ஆனால் ராகு சரியான இடத்தில் அமர்ந்தால் பல நன்மைகளை வழங்குவார் என்பதே உண்மை.

மே 31 அன்று ராகு தனது நிலையை மாற்றப்போகிறார், அதாவது சதய நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து முதல் பாதத்திற்குப் பெயர்ச்சி அடைகிறது. ராகு ஆகஸ்ட் 2 வரை, அதாவது ஏறக்குறைய 64 நாட்கள், அதே நிலையில் நிலைத்திருப்பார். ஜோதிடத்தில் ராகுவின் வக்ர பெயர்ச்சி மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்; மேலும், ராகுவின் இந்தப் பெயர்ச்சியானது அனைத்து ராசிகளின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும், இருப்பினும், ராகுவின் இந்த நகர்வு சில ராசிகளுக்குச் சிறப்பான பலன்களை அனுபவிக்கப்போகிறார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மிதுனம்

ராகுவின் வக்ர பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்களை அளிக்கும் என்று கருதப்படுகிறது. இந்த காலகட்டத்தில் பதவி உயர்வு, புதிய வேலைவாய்ப்பு அல்லது வருமான உயர்வுக்கான வாய்ப்புகள் ஏற்படலாம். இந்த ராகு பெயர்ச்சியால் அவர்களின் பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உங்களின் கடந்த கால முதலீடுகள் இப்போது லாபத்தை அளிக்கும். வேலை தேடுபவர்களுக்கு அவர்கள் விரும்பும் புதிய வேலை கிடைக்கும். நீங்கள் தற்போது வேலையில் இருந்தால், பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

அவர்களின் கடந்த கால கடன் பிரச்சினைகள் இப்போது முடிவுக்கு வரும். அவர்களின் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை அளிக்கும். அவர்களை புண்படுத்தியவர்கள் தேடிவந்து மன்னிப்பு கேட்கலாம். எல்லோரையும் மன்னிக்கும் பரந்த மனது அவர்களுக்கு இருக்கும். அது அவர்களின் நற்பயரை அதிகரிக்கும்.

Rahu Transit in May 2026 List of Three Lucky Zodiac Signs

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு ராகுவின் இந்த பெயர்ச்சி வெற்றிக்கான கதவுகளைத் திறக்கப்போகிறது. வேலையில் இருப்பவர்கள் நீண்டகால வளர்ச்சிக்கு உதவக்கூடிய புதிய பொறுப்புகளைப் பெறக்கூடும். இந்த காலகட்டத்தில் அவர்கள் அனுபவித்து வந்த சிக்கல்கள் குறையும். மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்த வாழ்க்கை வாழ ராகு உதவுவார். நிதிநிலையில் முன்னேற்றம், கடனாக கொடுத்த பணம் திரும்ப கிடைப்பது போன்ற பலன்கள் கிடைக்கலாம்.

இதுவரை செய்ய முடியாது என்று சாதித்த பல விஷயங்களை மே மாதத்திற்குள் அவர்களால் சாதிக்க முடியும். அவர்கள் மனதில் இருந்து வந்த கவலைகள் முடிவுக்கு வரும். மாணவர்கள் கல்வியில் பெரிய சாதனைகளைப் செய்ய முடியும். உங்கள் வேலையில் ஸ்திரத்தன்மையை அடைவீர்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு ராகுவின் இந்த பெயர்ச்சி பல நேர்மறையான பலன்களை அளிக்கப்போகிறது. நீண்ட நாட்களாக எதிர்பார்த்த வெற்றி இறுதியாக கைக்கு கிடைக்கலாம், அதேவேளையில், பணியிடத்தில் நீங்கள் மேற்கொள்ளும் கடின உழைப்பு உங்கள் மேலதிகாரிகளால் அங்கீகரிக்கப்படலாம். வியாபாரிகள் இந்த காலகட்டத்தில் பெரிய ஒப்பந்தங்களை எதிர்பார்க்கலாம். ராகுவின் தாக்கம் கும்ப ராசிக்காரர்களின் நம்பிக்கையை அதிகரிக்கிறது மற்றும் புதிய திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்த வழிவகுக்கிறது.

உங்கள் வாழ்க்கையில், பல்வேறு ஒப்பந்தங்கள் மூலம் பணம் சம்பாதிக்க நல்ல வாய்ப்புகள் இருக்கும். வணிகர்கள் தங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்த சிறந்த வாய்ப்பைப் பெறுவார்கள், மேலும் அதிக வருமானத்தை ஈட்ட முடியும். குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சினைகள் முடிவுக்கு வந்து வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net