← முகப்பு செய்திகள்

IPL 2026 – Which Team Win Today Will give advantage for CSK

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 42 பார்வைகள்
IPL 2026 – Which Team Win Today Will give advantage for CSK

மும்பை: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை 2 முக்கிய ஆட்டங்கள் நடைபெற உள்ளன. முதல் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.

இந்த போட்டி மதியம் மூன்று முப்பது மணிக்கு தர்மசாலாவில் தொடங்குகிறது .62 வது லீக் ஆட்டமாக இன்றைய இரண்டாவது போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

இந்த போட்டி ஏழு முப்பது மணிக்கு டெல்லியில் தொடங்குகிறது. இதுவரை 60 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இன்னும் 10 ஆட்டங்கள் மட்டுமே எஞ்சி இருக்கிறது. ஆனால் இதுவரை ஒரு அணி கூட பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்யவில்லை. இந்த நிலையில் இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை ஆர்சிபி வீழ்த்தினால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் அணி என்ற பெருமையை பெறும்.

IPL 2026- கிறிஸ் கெயில் கூட செய்தது இல்ல.. ஐபிஎல் வரலாற்றில் ஃபின் ஆலன் மாபெரும் சாதனை.. ஒரே வீரர்

இந்த நிலையில் கடந்த போட்டியில் சிஎஸ்கே அணி லக்னோவிடம் தோல்வியை தழுவி பெரும் பின்னடைவை சந்தித்தது. தற்போது புள்ளி பட்டியலில் சென்னை அணி 12 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளது. சிஎஸ்கே அணி பிளே ஆப்க்கு செல்ல வேண்டும் என்றால் கடைசி இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று பின்னர் மற்ற அணிகளின் முடிவுகளும் சிஎஸ்கேவுக்கு சாதகமாக அமைய வேண்டும்.

அப்படி இருக்க இன்றைய ஆட்டத்தில் யார் வெற்றி பெற்றால் சிஎஸ்கேவுக்கு நல்லது என்பதை தற்போது பார்க்கலாம். ஆர்சிபி அணி 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ள நிலையில், இன்றைய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆர்சிபி அணியை வெல்ல வேண்டும். ஒருவேளை பஞ்சாப் அணி வென்றால் அது சிஎஸ்கே வின் வாய்ப்பை பாதித்துவிடும்.

பஞ்சாப் அணி 13 புள்ளிகளில் தொடர்கிறது. அந்த அணி கடைசியாக விளையாட போகும். இரண்டு ஆட்டங்களிலும் தோல்வியை தழுவ வேண்டும். இதே போன்று இரவு நடைபெறும் ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி வெற்றி பெற வேண்டும். ஆனால் டெல்லி அணியின் நெட் ரன் ரேட் சிஎஸ்கே வை தாண்டி சென்று விடக்கூடாது. ஏனென்றால் டெல்லி அணி தற்போது 10 புள்ளிகளுடன் உள்ளது. சிஎஸ்கே அணி 12 புள்ளிகளுடன் உள்ளது.

IPL 2026- ரூ.18 கோடி போச்சா! 8 பந்துகள் வீசிய நிலையில் பதிரானா மீண்டும் காயம்.. தப்பித்த சிஎஸ்கே

இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தானை வீழ்த்தினால், டெல்லி அணி 12 புள்ளிகளுக்கு வந்து விடும். ஒருவேளை ராஜஸ்தான் என்றால் அவர்கள் 14 புள்ளிகளுக்கு சென்று விடுவார்கள்.இதுவும் சிஎஸ்கேவுக்கு பாதகத்தையே ஏற்படுத்தும். சிஎஸ்கே அணி நாளை சன்ரைசர்ஸ் அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்கிறது.

மேலும் செய்திகள்
செய்திகள்
India vs Afghanistan Test: India targets a massive first-innings total against Afghanistan
07 Jun 2026
செய்திகள்
சட்டம் – ஒழுங்கு தொடர்பான பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிய தமிழகம் முழு வதும் ரோந்துப் பணிகள்
59 நிமிடங்கள் முன்னர்
செய்திகள்
தமிழக அமைச்​சரவை கூட்​டத்​தில் 436 திட்​டங்​களை 90 நிமிடத்​தில் ஆலோ​சித்​தது எப்​படி என்​பது குறித்து அமைச்​சர
1 மணி நேரம் முன்னர்
செய்திகள்
சிறுவர் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் குற்றவாளியென நிரூபிக்கப்பட்ட பௌத்த பிக்கு ஒருவருக்கு 24 ஆண்டுகள் கடுழியச்
1 மணி நேரம் முன்னர்
செய்திகள்
டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சி நடத்திய ஒருநாள் போராட்டம் என்ன பலன் தந்தது?
1 மணி நேரம் முன்னர்
செய்திகள்
பாராளுமன்றத்துக்குள் இருக்கும் ஏனைய அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன
1 மணி நேரம் முன்னர்
முக்கிய செய்திகள்
1
India vs Afghanistan Test: India targets a massive first-innings
2
Today Rasi Palan: இங்கு 2026 ஜூன் 07 ஆம் தேதியான இன்று மேஷம், ரிஷ
3
மத்திய பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள முக்கிய துறைமுகம்
தலையங்கம் · 27 நிமிடங்கள் முன்னர்
4
சட்டம் – ஒழுங்கு தொடர்பான பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிய தமிழக
செய்திகள் · 59 நிமிடங்கள் முன்னர்
5
தமிழக அமைச்​சரவை கூட்​டத்​தில் 436 திட்​டங்​களை 90 நிமிடத்​தில் ஆ
செய்திகள் · 1 மணி நேரம் முன்னர்
6
சிறுவர் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் குற்றவாளியென நிரூபிக்கப்பட்ட
செய்திகள் · 1 மணி நேரம் முன்னர்
7
டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சி நடத்திய ஒருநாள் போராட்டம் என்ன பலன
செய்திகள் · 1 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net