59 வது இராணுவ தடகள போட்டியின் நிறைவு 31 ம் திகதி சுகததாச மைதானத்தில் !

by admin

on Thursday, March 28, 2024

59 வது இராணுவ தடகள போட்டியின் இறுதிப் போட்டியும் நிறைவு விழாவும் எதிர்வரும் 31ஆம் திகதி கொழும்பு சுகததாச மைதானத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே தலைமையில் நடைபெறவுள்ளது.

59 வது இலங்கை இராணுவ படையணிகளுக்கு இடையிலான தடகள விளையாட்டுப் போட்டியில் 21 படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தி 575 வீர வீராங்கனைகள் 26 நிகழ்வுகளில் பங்குபற்றினர்.

59 வது இராணுவ தடகள போட்டியின் முதற்கட்டம் 06 புதிய சாதனைகளுடன் அண்மையில் (23ஆம் திகதி) நிறைவடைந்தது.

போட்டியின் இரண்டாம் நாள் முடிவில், ஆண்கள் பிரிவில் இலங்கை பீரங்கி படையணியும் பெண்கள் பிரிவில் இலங்கை மகளிர் படையணியும் முன்னிலையில் இருந்தன.

ஆண்களுக்கான 100 மற்றும் 200 மீ ஓட்டங்கள், ஆண்களுக்கான 3000 மீற்றர் தடை தாண்டல் ஓட்டம், பெண்களுக்கான 10000 மீற்றர் ஓட்டம், பெண்களுக்கான 100 X 4 மீ அஞ்சல் ஓட்டம் மற்றும் பெண்களுக்கான சப்த போட்டிகள் ஆகியவற்றில் இராணுவ வீர வீராங்கனைகள் புதிய சாதனைகளை படைத்துள்ளனர்.

இலங்கை பீரங்கி படையணியின் அருண தர்ஷன ஆண்களுக்கான 200 மீற்றர் போட்டியை 20.45 வினாடிகளில் நிறைவு செய்தமையும், இந்த நாட்டில் இதுவரையில் ஒரு தடகள வீரர் பதிவு செய்த சிறந்த நேரமாகும் என்பதும் விசேட அம்சமாகும்.

இப்போட்டியில் 20.59 வினாடிகளில் நிறைவு செய்த மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் கலிங்க குமாரகே வெள்ளிப் பதக்கத்தையும், பந்தயத்தை 20.96 வினாடிகளில் நிறைவு செய்த இலங்கை பீரங்கி படையணியின் முகமது சபான் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

பெண்களுக்கான 10000 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை இராணுவ மகளிர் படையணியைச் சேர்ந்த எம்.ஆர்.வீரசூரிய 35:01:91 நிமிடங்களில் போட்டியை நிறைவு செய்து தங்கப் பதக்கத்தை தனதாக்கிக் கொண்டார்.

இதேவேளை, ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியை 10.42 வினாடிகளில் நிறைவு செய்து புதிய போட்டி சாதனையை நிலைநாட்டிய இலங்கை மின்சார மற்றும் பொறியியல் படையணியின் வை.சி.எம்.யோதசிங்க தங்கப் பதக்கத்தை வென்றார்.

பெண்களுக்கான சப்த போட்டியில், மகளிர் அணியைச் சேர்ந்த லக்ஷிகா சுகந்தி, மொத்தம் 4426 புள்ளிகளைப் பெற்று, புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்றார்.

பெண்களுக்கான 100 மீட்டர் அஞ்சல் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்று, புதிய விளையாட்டு சாதனை படைத்தார். இலங்கை சமிக்ஞைப் படையணி மகளிர் அணி சித்தியடைந்ததுடன், அந்த அணியை பிரதிநிதித்துவப்படுத்தி டி.ஏ.முத்துக்குமாரண, அமாஷா டி சில்வா, ஷபியா யாமிக், சுபானி அபேரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்