மாணவர் மேன்மை கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் க.பொ.த.சாதாரண பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான இலவச செயலமர்வுகள்

by admin

மாணவர் மேன்மை கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் க.பொ.த.சாதாரண பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான இலவச செயலமர்வுகள் on Saturday, April 27, 2024

(சித்தா)

இவ்வருடம் க.பொ.த.சாதாரண பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு மாணவர் மேன்மை கல்வி அபிவிருத்திச் சங்கம் இலவச செயலமர்வுகளை நடாத்தி வருகின்றது. இந்த வகையில் இன்று சங்கத்தின் தலைவர் சாம்பசிவன் பரணிதரன் மட்/பட்/வெல்லாவெளி கலைமகள் மகாவித்தியாலயம், மட்/பட்/திக்கோடை கணேச வித்தியாலயம் ஆகிய நிலையங்களில்  செயலமர்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது. தமிழர்களின் இறுதி ஆயுதம் கல்வி எனவும் இதற்கு எமது அமைப்பு தொடர்ந்து கரம் கொடுக்கும் என தலைவர் செயலமர்வினை ஆரம்பித்து வைத்து உரையாற்றினார்.

இன்று இரு நிலையங்களிலும்  சிறந்த வளவாளர்களினால் கணித பாடம் நடைபெற்றது. சுமார் 100 மாணவர்கள் இலவச செயலமர்வில் பங்குபற்றியதுடன் அம் மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சிக் கையேடுகளும் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்திகள்