← முகப்பு செய்திகள்

வளைகுடா போரில் ஈரான்-அமெரிக்கா இடையே தற்போது போர் நிறுத்தம் அமலில் உள்ளது. இதற்கிடையே போரை முடிவுக்கு

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 14 பார்வைகள்
வளைகுடா போரில் ஈரான்-அமெரிக்கா இடையே தற்போது போர் நிறுத்தம் அமலில் உள்ளது. இதற்கிடையே போரை முடிவுக்கு
கச்சா எண்ணெய் விலை விரைவில் சரியும் – டிரம்ப் நம்பிக்கை

வளைகுடா போரில் ஈரான்-அமெரிக்கா இடையே தற்போது போர் நிறுத்தம் அமலில் உள்ளது. இதற்கிடையே போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் ஏற்படுவதில் இழுபறி நீடித்து வருகிறது. இதனால் ஈரானுக்கு அமெரிக்கா அதிபர் டிரம்ப் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறார். ஒப்பந்தத்தை ஏற்காவிட்டால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையே, அரபு நாடுகளின் வேண்டுகோள்களுக்கு இணங்க ஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளதாக டிரம்ப் கூறியிருந்தார்,. இந்த நிலையில், வாஷிங்டன்னில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டிரம்ப், கச்சா எண்ணெய் விலை விரைவில் சரியும் என்றார். இது தொடர்பாக டிரம்ப் கூறுகையில்,மேற்கு ஆசியாவில் ஏராளமான எண்ணெய் உள்ளது. அவை கடுமையாக வீழ்ச்சியடையும். எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சி அடைவதை நீங்கள் காண்பீர்கள்”என்றார்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net