← முகப்பு செய்திகள்

பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த லொறியுடன் தனியார் பேருந்து மோதியதில், லொறியில் பயணித

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 28 பார்வைகள்
பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த லொறியுடன் தனியார் பேருந்து மோதியதில், லொறியில் பயணித
பொகவந்தலாவையில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு

பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த லொறியுடன் தனியார் பேருந்து மோதியதில், லொறியில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியான தலைமை ஆய்வாளர் நுவன் மதுசங்க தெரிவித்தார்.

இன்று (20) காலை சுமார் 10 மணியளவில், ஆழ்துளைக் கிணறுகளைச் சரிசெய்யும் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்தது.

அப்போது அந்த லொறியில் வந்திருந்த தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர் லொறியிலிருந்து இறங்கி அதன் அருகே நின்று கொண்டிருந்தபோது பொகவந்தலாவையில் இருந்து ஹட்டன் நோக்கி செல்லத் தயாராக இருந்த தனியார் பேருந்து இயக்க நிலையில் சாரதி இல்லாமல் தானாகவே முன்னோக்கிச் சென்று முன்பாக நிறுத்தப்பட்டிருந்த லொறியின் மீது மோதியதில் லொறிக்கு அருகே நின்று கொண்டிருந்த தொழில்நுட்ப வல்லுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் பொகவந்தலாவையைச் சேர்ந்த 28 வயது இளைஞர் என பொலிஸார் தெரிவித்தனர் .

சந்தேகத்தின் பேரில் விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net