← முகப்பு செய்திகள்

பிரதமர் மோடி 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, ஸ்வீடன்,

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 14 பார்வைகள்
பிரதமர் மோடி 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, ஸ்வீடன்,
இத்தாலி பிரதமருடன் மோடி சந்திப்பு

பிரதமர் மோடி 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே, இத்தாலி ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

அதன்படி, ஏற்கனவே 4 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி இன்று இத்தாலி சென்றுள்ளார். தலைநகர் ரோம் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இத்தாலி துணை பிரதமர் அண்டோனியோ தஜானி விமான நிலையத்திற்கே நேரில் சென்று பிரதமர் மோடியை வரவேற்றார். இந்நிலையில், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியை பிரதமர் மோடி சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்த உள்ளனர்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net