← முகப்பு தமிழ்

சமூக ஊடகங்களில் பரவி வரும் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியரைத் தாக்கும் காணொளியில் இடம்பெற்ற சந்தேகநபர்

🕐 05 Jun 2026 📂 தமிழ் 4 பார்வைகள்

சமூக ஊடகங்களில் பரவி வரும் எரிபொருள் நிரப்பு

எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் ஒருவரைத் தாக்கும் காணொளி ஒன்று நேற்று (2026.06.03) சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டது. தாக்குதலுக்கு உள்ளானவர் மிரிஹான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பின்னியார எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பணியாற்றும் ஊழியர் ஆவார். இந்தச் சம்பவம் 2026.06.03 அன்று பிற்பகலில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் இன்று மிரிஹான பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் 34 வயதுடையவராகவும், கோட்டை – மாதிவெல பகுதியில் வசிப்பவராகவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் QR குறியீடு (QR Code) இன்றி குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருள் பெற வந்தபோது, QR குறியீடு இல்லாமல் எரிபொருள் வழங்க முடியாது என பம்ப் இயக்குநர் தெரிவித்ததாகவும், அதனைத் தொடர்ந்து இத் தாக்குதல் இடம்பெற்றதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இத் தாக்குதல் தொடர்பாக மிரிஹான பொலிஸார் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளின் போது, தாக்குதலுக்கு உள்ளான எரிபொருள் நிலைய ஊழியர், இச்சம்பவத்தை பொலிஸார் சமரசமாகத் தீர்த்துவைக்குமாறு கோரியுள்ளார். அதன்படி, தாக்குதலில் ஈடுபட்ட சந்தேகநபருக்கு கடுமையான எச்சரிக்கை வழங்கப்பட்டு, விவகாரம் சமரசமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும், தாக்குதலுக்கு உள்ளான ஊழியரும் மேலதிக வாக்குமூலம் வழங்கி, இந்த முறைப்பாட்டை தொடர்ந்து முன்னெடுக்க விருப்பமில்லை எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்
📰
தமிழ்
(இராஜதுரை ஹஷான்)வெளிநாட்டில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள அசாத் மௌலானாவின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டே உயிர
05 Jun 2026
📰
தமிழ்
“உலக சந்தை நிலவரங்களுக்கு மத்தியில் எரிபொருள் விலை அதிகரித்துள்ள போதிலும், ஏனைய மேலதிக மூலப்பொருட்களின் விலைகள
05 Jun 2026
📰
தமிழ்
இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேர காலப்பகுதியில் நுவரெலியா மாவட்டத்தில் 118.80 மில்லிமீட்டர்
05 Jun 2026
📰
தமிழ்
அங்குருவாதொட்ட, படகொட பகுதியில் தீ விபத்துக்குள்ளான முதியோர் இல்லம் எந்தவொரு அரச நிறுவனத்தின் கீழும் பதிவு
05 Jun 2026
📰
தமிழ்
உரிய தரநிலைகளுக்கு அமைய பராமரிக்கப்படாத முதியோர் இல்லங்கள் மற்றும் பராமரிப்பு நிலையங்களுக்கு எதிராக எதிர்காலத்
05 Jun 2026
📰
தமிழ்
அமெரிக்காவினால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட எல்.என்.எஸ் சமுத்ரவிஜய போர்க் கப்பல் இலங்கை கடற்படை சேவையில
11 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net