← முகப்பு தமிழ்

“உலக சந்தை நிலவரங்களுக்கு மத்தியில் எரிபொருள் விலை அதிகரித்துள்ள போதிலும், ஏனைய மேலதிக மூலப்பொருட்களின் விலைகள

🕐 05 Jun 2026 📂 தமிழ் 2 பார்வைகள்

“உலக சந்தை நிலவரங்களுக்கு மத்தியில் எரிபொருள் விலை அதிகரித்துள்ள போதிலும், ஏனைய மேலதிக மூலப்பொருட்களின் விலைகளில் பாரிய உயர்வு எதுவும் ஏற்படவில்லை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமார தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் உரையாற்றிய அவர், தற்போதைய பொருளாதார நிலைமையை அரசாங்கம் மிகச் சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்து வருவதாகக் குறிப்பிட்டார்.எரிபொருள் விலை

எரிபொருள் இறக்குமதிச் செலவுகள் குறித்த தரவுகளை முன்வைத்த நாடாளுமன்ற உறுப்பினர், பெப்ரவரி மாதத்தில் எரிபொருள் இறக்குமதிக்காக 98 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்ட போதிலும், ஏப்ரல் மாதமாகும் போது அந்தச் செலவு 522 மில்லியன் டொலர்கள் வரை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்புக்கு மத்தியில், ஒரு லீற்றர் எரிபொருளின் உண்மையான விலை சுமார் 740 ரூபாவாக இருக்க வேண்டும் என்ற போதிலும், அரசாங்கம் தற்போது அதனை 424 ரூபா என்ற எல்லைக்குள் பேணி வருகின்றது.

இதற்காக திறைசேரி சுமார் 20,000 கோடி ரூபாவை செலவிட்டு எரிபொருள் விலையை முகாமைத்துவம் செய்வது, மக்கள் மீது முழுமையான சுமையை சுமத்தாமல் இருப்பதற்காகவே என்று அவர் வலியுறுத்தினார்.

எரிபொருள் விலையைத் தவிர ஏனைய மேலதிக மூலப்பொருட்களின் விலைகளில் பாரிய அதிகரிப்பு எதுவும் ஏற்படவில்லை என்பதால், பேருந்து கட்டணங்களை அதிகரிப்பதற்கான கடுமையான தேவை தற்போது இல்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இங்கு தெரிவித்தார்.

இருப்பினும், இது தொடர்பாக பேருந்து சங்கங்களுடன் கலந்துரையாடி, மக்களுக்கும் பேருந்து உரிமையாளர்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் தீர்வுகளை வழங்க அரசாங்கம் தயாராக உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்தகால அரசாங்கங்களைப் போலல்லாமல், உலக சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப விலைகளைக் குறைக்கக்கூடிய ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அந்த நிவாரணத்தை மக்களுக்கு வழங்க அரசாங்கம் உறுதியாக உள்ளதாக பத்மகுமார தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி போன்ற நிறுவனங்கள் கூட இலங்கையின் பொருளாதாரம் எந்தவொரு சர்வதேச சூழ்நிலையையும் எதிர்கொள்ளக்கூடிய மட்டத்திற்கு வந்துள்ளதாக ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், 2026ஆம் ஆண்டுக்குரிய எந்தவொரு அபிவிருத்தித் திட்டத்தையும் நிறுத்தாமல் முன்னோக்கி கொண்டு செல்லவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.”

மேலும் செய்திகள்
📰
தமிழ்
சமூக ஊடகங்களில் பரவி வரும் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியரைத் தாக்கும் காணொளியில் இடம்பெற்ற சந்தேகநபர்
05 Jun 2026
📰
தமிழ்
(இராஜதுரை ஹஷான்)வெளிநாட்டில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள அசாத் மௌலானாவின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டே உயிர
05 Jun 2026
📰
தமிழ்
இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேர காலப்பகுதியில் நுவரெலியா மாவட்டத்தில் 118.80 மில்லிமீட்டர்
05 Jun 2026
📰
தமிழ்
அங்குருவாதொட்ட, படகொட பகுதியில் தீ விபத்துக்குள்ளான முதியோர் இல்லம் எந்தவொரு அரச நிறுவனத்தின் கீழும் பதிவு
05 Jun 2026
📰
தமிழ்
உரிய தரநிலைகளுக்கு அமைய பராமரிக்கப்படாத முதியோர் இல்லங்கள் மற்றும் பராமரிப்பு நிலையங்களுக்கு எதிராக எதிர்காலத்
05 Jun 2026
📰
தமிழ்
அமெரிக்காவினால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட எல்.என்.எஸ் சமுத்ரவிஜய போர்க் கப்பல் இலங்கை கடற்படை சேவையில
11 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net