← முகப்பு தலையங்கம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நெதர்லாந்து, ஸ்வீடன், நோர்வே ஆகிய நாடுகளுக்குப்

🕐 2 வாரம்கள் முன்னர் 📂 தலையங்கம் 46 பார்வைகள்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நெதர்லாந்து, ஸ்வீடன், நோர்வே ஆகிய நாடுகளுக்குப்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நெதர்லாந்து, ஸ்வீடன், நோர்வே ஆகிய நாடுகளுக்குப் பின்னர் இத்தாலியில் இன்று மெலோனியுடன் சந்திப்பில் ஈடுபட்டார்.

மே 15 முதல் 20 வரையிலான 6 நாள் வெளிநாட்டுப் பயணத்தின் இறுதிக் கட்டமாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இத்தாலி சென்றடைந்தார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நெதர்லாந்து, ஸ்வீடன், நோர்வே ஆகிய நான்கு நாடுகளுக்குப் பின் இத்தாலியில் இன்று (மே 20) நுழைந்த மோடிக்கு, அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ரோம் விமான நிலையத்தில் இத்தாலி துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான அன்டோனியோ தஜானி நேரில் சென்று பிரதமர் மோடியை வரவேற்றார். இதனையடுத்து, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி மோடிக்கு விருந்தொன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

அப்போது இருவரும் பல்வேறு விடயங்கள் குறித்துக் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். 'Welcome to Rome, my friend' (ரோமுக்கு வருக, நண்பரே) என மெலோனி வெகுவாக வரவேற்றதுடன், உணவகத்தில் இருவரும் இணைந்து புகைப்படம் ஒன்றையும் எடுத்துக் கொண்டனர். மோடிக்கு அளிக்கப்பட்ட இந்த வரவேற்பு, உலகளவில் கவனத்தைப் பெற்றது.

இன்று (மே 20) நடைபெறும் முக்கிய இருநிலைப் பேச்சுவார்த்தையின் போது, இரு நாட்டுத் தலைவர்களும் வர்த்தகம், பாதுகாப்பு, தூய எரிசக்தி, செயற்கை நுண்ணறிவு, மற்றும் இந்திய-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் (IMEC) உள்ளிட்ட முக்கியத் துறைகளில் இடையிலான உறவுகளை எவ்வாறு வலுப்படுத்துவது என்பது குறித்து ஆலோசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், 2025-2029 கூட்டு மூலோபாய நடவடிக்கைத் திட்டம் (Joint Strategic Action Plan) மறுஆய்வு செய்யப்படும். 2025 ஆம் ஆண்டில் இந்தியா-இத்தாலி இடையேயான இருநாட்டு வர்த்தகம் 16.77 பில்லியன் டாலர்களாக இருந்தது, மேலும் இத்தாலியிடமிருந்து இந்தியாவுக்கான ஒட்டுமொத்த நேரடி முதலீடு 3.66 பில்லியன் டாலர்களாக இருந்தது.

இப்பேச்சுவார்த்தையின்போது 2029ஆம் ஆண்டிற்குள் 20 பில்லியன் யூரோ வர்த்தக இலக்கை எட்டுவது குறித்தும் கலந்துரையாடப்படும். இரு தலைவர்களும் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. மோடி அதிபர் செர்ஜியோ மட்டரெல்லாவையும் சந்தித்து உரையாடுவார்.

மேலும் செய்திகள்
தலையங்கம்
தமிழக அரசியல் களம் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய சூழலிலும் நாளுக்கு நாள் பல்வேறு பரபரப்பான திருப்பங்களைச்
6 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
தமிழக அரசியல் வட்டாரத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு விவாதங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் வேளையில், தற்போதைய
8 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
சென்னை மாநகராட்சியில் மக்கள் பிரதிநிதிகளாகப் பொறுப்பேற்றுள்ள மேயர், துணை மேயர் உள்ளிட்ட 75 சதவீதத்திற்கும் அதி
8 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
இன்றைய தேதிக்கும் சமூக வலையத் தளங்களில் இந்த புகைப்படம் தான் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. சமீபத்தில்
9 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
தமிழகத்தையே உலுக்கிய கோவை சிறுமி கொலை வழக்கில், 3 நாள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட முக்கியக்
10 மணி நேரம் முன்னர்
தலையங்கம்
சென்னைக்கு அருகேயுள்ள கிழக்கு கடற்கரைச் சாலை (ECR) பகுதியில் அமைந்துள்ள முட்டுக்காடு கிராமத்தில், கடந்த சில
11 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net