ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் ராசி மாற்றங்கள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதேபோல நட்சத்திர மாற்றமும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஜூன் மாதத்தில் பல்வேறு கிரகங்கள் தங்களின் நட்சத்திரத்தை மாற்றப்போகின்றன. அந்த வகையில் ஜூன் 11 ஆம் தேதி சுக்கிரன் சனிபகவானால் ஆளப்படும் பூச நட்சத்திரத்திற்குள் நுழையப்போகிறார், மேலும் ஆகஸ்ட் 2 வரை அதே நட்சத்திரத்தில் நிலைபெற்றிருப்பார்.
ஜோதிடத்தில் சுக்கிரன் செல்வம், உறவுகள் மற்றும் ஆடம்பரத்தின் அதிபதியாகக் கருதப்படுகிறார். எனவே சுக்கிரனின் கிரக மாற்றம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. சுக்கிரனின் இந்த நட்சத்திர மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு அவர்களின் தனிப்பட்ட உறவுகள் மற்றும் தொழில் வாழ்க்கையில் சிறப்பான நன்மைகளை அளிக்கப்போகிறது. அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ரிஷபம்
சுக்கிரன் ரிஷப ராசியின் ஆளும் கிரகமாக இருப்பதால் அவர்கள் இந்த நட்சத்திர மாற்றத்தால் நேரடியான பலன்களை அனுபவிப்பார்கள். இந்த காலகட்டத்தில் அதிர்ஷ்டம் அவர்களுக்கு சாதகமாக இருக்கும், மேலும் அவர்கள் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பணிகளை வெற்றிகரமாக முடிக்க முடியும். இதனால் அவர்கள் பல்வேறு துறைகளிலிருந்து பயனுள்ள பலன்களை எதிர்பார்க்கலாம். இந்த காலகட்டத்தில் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படலாம்.
வெளிநாடுகளில் வணிகம் அல்லது வேலையில் ஈடுபடுபவர்கள் அதிக லாபம் ஈட்டலாம். மேஷ ராசிக்காரர்களின் நிதி நிலை வலுவாக மாறும், மேலும் பழைய முதலீடுகளிலிருந்து நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம். போட்டித் தேர்வுகளில் மாணவர்களுக்கு வெற்றிக்கான வாய்ப்புகள் உள்ளன. அவர்களின் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணங்கள் உருவாகும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த நட்சத்திர மாற்றம் அபரிமிதமான வளர்ச்சியை அளிக்கப்போகிறது. இந்த நட்சத்திர மாற்றத்தால் அவர்களின் நிதிநிலை எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருக்கும். நீண்ட கால முதலீடுகளுக்கு இது சிறந்த நேரமாக இருக்கும். அவர்கள் வருமானத்திற்கான புதிய வழிகள் திறக்கும். வாழ்வின் பல விஷயங்களில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
இந்த காலகட்டத்தில் அவர்கள் புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளலாம் மற்றும் திறமைகள் அதிகரிக்கலாம். குறிப்பாக இப்போது ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் மேலும் உங்கள் பெற்றோரின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வெளிநாட்டில் வேலை செய்ய விரும்புபவர்கள் இந்த காலகட்டத்தில் அதற்கான வாய்ப்புகளைப் பெறலாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் இந்த நட்சத்திர மாற்றம் பல நேர்மறையான பலன்களை அளிக்கப்போகிறது. இந்த நட்சத்திர மாற்றத்தால் அவர்கள் புதிய வாகனம் அல்லது சொத்துக்கள் வாங்க வாய்ப்புகள் உருவாகலாம். பொருளாதாரநிலை கடந்த காலத்தை விட மிகவும் சிறப்பாக இருக்கும். அவர்கள் விரும்பும் பல விஷயங்களை அடைய முடியும். உங்களைப் பற்றி பலருக்கு இருந்த தவறான எண்ணங்கள் முடிவுக்கு வரும்.
திருமணமான தமபதிகளிடையே நெருக்கமும், ஒற்றுமையும் அதிகரிக்கும். வீட்டிற்காக சில ஆடம்பர பொருட்களை வாங்கலாம். வேலை தேடுபவர்களுக்கு சிறப்பான வேலை வாய்ப்புகள் கிடைக்கும். புதிய திட்டங்களில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது. அலுவலகத்தில் அவர்களின் செயல்திறன் அதிகரிப்பதால், பல்வேறு சாதனைகளும், அங்கீகாரமும் தேடிவரும். குடும்பத்தினரின் முழு ஆதரவும் அவர்களுக்குக் கிடைக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.