← முகப்பு செய்திகள்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் கலந்துக் கொண்ட எம்.பி. ஆ.ராசா

🕐 05 Jun 2026 📂 செய்திகள் 4 பார்வைகள்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் கலந்துக் கொண்ட எம்.பி. ஆ.ராசா

சென்னை அம்பத்தூரில் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய திமுக துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான ஆ.ராசா முதலமைச்சர் விஜயை கடுமையாக சாடினார்.

அப்போது பேசிய அவர், ”இந்தியாவே தமிழ்நாட்டை உற்றுப் பார்த்தது. இந்த தமிழ்நாடு இப்படி ஆகிவிட்டதே என நினைக்கிறார்கள். ஒரு அறிவாளியிடம் தோற்றால் பரவாயில்லை. அரசியல் ஆளுமை கிட்ட தோற்றால் பரவாயில்லை. உள்ளபடியாக ஒரு மாற்றம் இருந்தால் பரவாயில்லை. இப்போது தமிழ்நாட்டில் ஒரு மாற்றம் வந்திருக்கிறது என சொல்கிறார்கள். என்ன கிழிக்கப் போகிறீர்கள். பேசிப் பேசி வளர்ந்த தமிழ்நாட்டு அரசியலில் பேசாத ஒரு ஆள் இன்றைக்கு முதலமைச்சராக இருக்கிறார். அப்படியே பேசினாலும் எங்கு தேவையோ அங்கு பேச மறுக்கிறார். வெளியே வந்தால் கைகளை நீட்டி வீர வசனம் பேசுகிறார். சட்டசபைக்கு போனால் அமைதியாக இருக்கிறார்” என்று முதலமைச்சர் விஜயை கடுமையாக விமர்சித்திருந்தார்.

தொடர்ந்து பேசிய ஆ.ராசா, முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவை பார்த்து, “சேகர்பாபு சொல்றேன்னு தப்பா நினைக்காத… நீயெல்லாம் எதோ பாவம் பண்ணிருக்க… இந்த சட்டசபைல போய் உட்கார்ந்திருக்கல” என்று கூறியது, அரங்கமே சிரிப்பலையால் அதிர்ந்தது.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net