← முகப்பு இன்றைய ராசிபலன்

Jupiter Moon Make Samsaptak Yog 2026: ஜூன் 04 ஆம் தேதி சமசப்தக் யோகம்

🕐 04 Jun 2026 📂 இன்றைய ராசிபலன் 4 பார்வைகள்
Jupiter Moon Make Samsaptak Yog 2026: ஜூன் 04 ஆம் தேதி சமசப்தக் யோகம்

Jupiter Moon Make Samsaptak Yog 2026: வேத ஜோதிடத்தின் படி, ஜூன் மாதம் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இந்த மாத தொடக்கத்திலேயே பல சுப யோகங்கள் உருவாகின்றன. அதில் ஜூன் 02 ஆம் தேதி குரு பெயர்ச்சியால் ஹன்ஸ் யோகம் உருவான நிலையில், ஜூன் 04 ஆம் தேதி சமசப்தக் யோகம் உருவாகிறது.

அதுவும் இந்த யோகமானது நவகிரகங்களில் மனதில் காரணியாக கருதப்படும் சந்திரன் மற்றும் தேவர்களின் குருவாக கருதப்படும் குரு பகவானின் நிலைகளால் உருவாகியது. ஜோதிட சாஸ்திரத்தின்படி, இரண்டு கிரகங்கள் ஒன்றுக்கொன்று ஏழாம் வீட்டில் அமைந்திருக்கும் போது இந்தச் சிறப்பு யோகம் உருவாகிறது. அந்த வகையில் குரு பகவான் கடக ராசியில் உள்ளார்.

அதுவும் ஜூன் 04 ஆம் தேதி மகர ராசியில் உள்ள சந்திரனிலிருந்து ஏழாம் வீட்டில் உள்ளார். இதனால் உருவாகியுள்ள சமசப்தக் யோகத்தால் சில ராசிக்காரர்கள் நிதி ரீதியாக நல்ல பலன்களைப் பெறுவதோடு, அந்த ராசிக்காரர்களுக்கு முன்னேற்றத்திற்கான பாதையும் திறக்கப்போகிறது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

Jupiter Moon Make Samsaptak Yog 2026 List Of Lucky Zodiac Signs

மேஷம்

குரு சந்திர சேர்க்கையால் உருவாகும் சமசப்தக் யோகத்தால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. வருமானத்தில் திடீர் உயர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கலாம். முக்கியமாக இந்த யோக காலமானது மறக்க முடியாதவையாக இருக்கும்.

Jupiter Moon Make Samsaptak Yog 2026 List Of Lucky Zodiac Signs

கடகம்

குரு சந்திர சேர்க்கையால் உருவாகும் சமசப்தக் யோகத்தால் கடக ராசிக்காரர்களின் மனதில் நேர்மறையான எண்ணங்கள் எழும். மன அழுத்தத்தால் அவதிப்பட்டு கொண்டிருந்தால் இந்த யோக காலத்தில் அதிலிருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.

Jupiter Moon Make Samsaptak Yog 2026 List Of Lucky Zodiac Signs

கன்னி

குரு சந்திரனால் உருவாகும் சமசப்தக் யோகத்தால் கன்னி ராசிக்காரர்கள் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். மாணவர்கள் போட்டி தேர்வுகளில் பங்கு கொண்டால், நல்ல வெற்றியைப் பெறுவார்கள். படிப்பில் உள்ள சிரமங்கள் குறையும். பங்குச் சந்தை, லாட்டரி ஆகியவற்றின் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். சட்ட பிரச்சனையை சந்தித்து வந்தால், அதற்கு நல்ல தீர்வு கிடைக்கும். மன அமைதி மேம்படும்.

Jupiter Moon Make Samsaptak Yog 2026 List Of Lucky Zodiac Signs

மீனம்

குரு சந்திர சேர்க்கையால் உருவாகும் சமசப்தக் யோகத்தால் மீன ராசிக்காரர்கள் நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். லட்சுமி தேவியின் பரிபூர்ண ஆசி கிடைக்கும். பெற்றோரின் முழு ஆதவு கிடைக்கும். இக்காலத்தில் எந்த ஒரு புதிய வேலையை தொடங்கினாலும் அதில் நல்ல வெற்றி கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். முன்னேற்றத்திற்கான பாதை திறக்கும். அதை திறம்பட பயன்படுத்தினால் வாழ்வில் நல்ல உயரத்தை அடையலாம்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net