← முகப்பு செய்திகள்

Vaibhav Sooryavanshi was allowed to accompany his parents on the Ireland and

🕐 07 Jun 2026 📂 செய்திகள் 8 பார்வைகள்
Vaibhav Sooryavanshi was allowed to accompany his parents on the Ireland and

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியில் முதல்முறையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள 15 வயது இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷியுடன், அவரது பெற்றோரும் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் உடன் செல்ல இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த 1989 ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் தனது 16-வது வயதில் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தின் மூலம் இந்திய அணியில் அறிமுகமானபோது, அவருக்கு ஆதரவாகவும் துணையாகவும் அவரது அண்ணன் அஜித் டெண்டுல்கர் உடன் சென்றார். தற்போது 37 ஆண்டுகளுக்குப் பிறகு, அதே போன்றதொரு நெகிழ்ச்சியான நிகழ்வு இந்திய கிரிக்கெட்டில் மீண்டும் அரங்கேற உள்ளது.

Vaibhav Sooryavanshi allowed to accompany with Parents on Ireland and England Tour

இந்திய டி20 அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ள 15 வயது வைபவ் சூர்யவன்ஷியுடன் அவரது பெற்றோரும் உடன் செல்ல பிசிசிஐ சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது. இதுகுறித்து பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா கூறுகையில், "வைபவ் இன்னும் ஒரு சிறுவன் என்பதால், அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்குச் செல்லும் இந்திய அணியுடன் அவரது பெற்றோரும் உடன் செல்ல அனுமதித்துள்ளோம். புதிய சூழலில் வைபவ் எளிதாகப் பழக அவர்கள் உடன் இருப்பது அவருக்குப் பெரிதும் உதவும். பெற்றோருக்கான ஒட்டுமொத்தப் பயணச் செலவையும் பிசிசிஐ-யே ஏற்கும்" என்றார்.

வைபவ் சூர்யவன்ஷி தற்போது இலங்கை சுற்றுப்பயணத்தில் முத்தரப்பு தொடருக்காக இந்தியா ஏ அணிக்காக விளையாடி வருகிறார். அவர் மீதான எதிர்பார்ப்பும் கவனமும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சர்வதேச கிரிக்கெட்டின் அடுத்த கட்டத்திற்கு அவர் நகர உள்ளதால், அவரது மன உறுதியை அதிகரிக்கவும், தேவையற்ற அழுத்தங்களைக் குறைக்கவும் அவரது பெற்றோர் அருகில் இருப்பது அவருக்கு மிகச் சிறந்த ஆதரவாக இருக்கும் என்று பிசிசிஐ கருதுகிறது.

இந்தியா – ஆப்கானிஸ்தான் டெஸ்ட்.. இன்னிங்ஸ் வெற்றி பெற இந்திய அணி எவ்வளவு ரன் குவிக்க வேண்டும்?

சமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடியபோது, அணியின் மேலாளர் ரோமி பிந்தர் அவருக்கு ஒரு பாதுகாவலரைப் போல இருந்து வழிநடத்தினார். தற்போது அதைவிடப் பெரிய சர்வதேச அரங்கில் விளையாட உள்ளதால், அவரது பெற்றோரின் நேரடி ஆதரவை பிசிசிஐ உறுதி செய்துள்ளது. அசத்தலான திறமையைக் கொண்டுள்ள வைபவ் சூர்யவன்ஷிக்கு, இந்த முடிவு அவரது ஆட்டத்திறனை மேலும் அதிகரிக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்
செய்திகள்
Rohit Sharma strongly backs Suryakumar Yadav after his shocking T20I captaincy removal
07 Jun 2026
செய்திகள்
Suryakumar Yadav shows incredible sportsmanship by congratulating and hugging Shreyas Iyer on
07 Jun 2026
செய்திகள்
India vs Afghanistan Test: India targets a massive first-innings total against Afghanistan
07 Jun 2026
செய்திகள்
‘ஒரு மணி நேரத்திற்கு ஒரு பேட்’: தகிக்கும் வெயிலில் ஜவுளி தொழிலாளர்கள் சந்திக்கும் மாதவிடாய் பிரச்னை – பிபிசி கள ஆய்வு
1 மணி நேரம் முன்னர்
செய்திகள்
சட்டம் – ஒழுங்கு தொடர்பான பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிய தமிழகம் முழு வதும் ரோந்துப் பணிகள்
3 மணி நேரம் முன்னர்
செய்திகள்
தமிழக அமைச்​சரவை கூட்​டத்​தில் 436 திட்​டங்​களை 90 நிமிடத்​தில் ஆலோ​சித்​தது எப்​படி என்​பது குறித்து அமைச்​சர
3 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net