← முகப்பு செய்திகள்

Switzerland vs Qatar FIFA World Cup: Qatar secures their first-ever World Cup

🕐 1 மணி நேரம் முன்னர் 📂 செய்திகள் 17 பார்வைகள்
Switzerland vs Qatar FIFA World Cup: Qatar secures their first-ever World Cup

சாண்டா கிளாரா: 2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் பி பிரிவின் பலம் வாய்ந்த சுவிட்சர்லாந்து அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில், கடைசி நிமிடத்தில் கோல் அடித்த கத்தார் அணி 1-1 என்ற கணக்கில் டிராவை பதிவு செய்து, தனது உலகக் கோப்பை வரலாற்றில் முதல் புள்ளியைப் பெற்று சாதனை படைத்துள்ளது. அமெரிக்காவின் லெவிஸ் மைதானத்தில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில் சுவிட்சர்லாந்து மற்றும் கத்தார் அணிகள் மோதின.

ஆட்டத்தின் 13வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்தின் பிரீல் எம்போலோவை கத்தார் கோல்கீப்பர் முகமது அபுநாடா ஃபவுல் செய்தார். இதனால் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி எம்போலோ 17வது நிமிடத்தில் அபாரமாக கோல் அடித்து சுவிட்சர்லாந்தை 1-0 என முன்னிலை பெறச் செய்தார். விசா பெறுவதில் ஏற்பட்ட தாமதத்திற்குப் பின் அமெரிக்கா வந்தடைந்த எம்போலோ அடித்த இந்த கோலை சுவிஸ் ரசிகர்கள் கொண்டாடினர்.

Switzerland vs Qatar FIFA World Cup Last-Minute Own Goal Denies Swiss and Hands Qatar Historic First Point

இப்போட்டியில் சுவிட்சர்லாந்து அணி ஆதிக்கம் செலுத்தியது. 1966ஆம் ஆண்டுக்கு பிறகு தனது உலகக் கோப்பை வரலாற்றிலேயே மிக அதிகமாக 26 முறை கோல் அடித்த சாதனையை தொட முயற்சித்தது. ஆனால், கத்தார் கோல்கீப்பரின் சிறப்பான தடுப்பாட்டத்தாலும், சுவிஸ் வீரர்களின் பினிஷிங் சொதப்பலாலும் அவர்களால் கூடுதல் கோல் அடிக்க முடியவில்லை.

ஆட்டம் சுவிட்சர்லாந்தின் வெற்றி நோக்கி நகர்ந்த போது, ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் (94வது நிமிடத்தில்) மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. கத்தார் வீரர் பௌலம் கௌகி கொடுத்த அழுத்தத்தால், சுவிஸ் டிபெண்டர் மிரோ முஹெய்ம் பந்தை தவறுதலாக தனது சொந்த கோல் போஸ்ட்டிற்குள் (ஓன் கோல்) தள்ளினார். இதன் மூலம் ஆட்டம் 1-1 என டிரா ஆனது.

Brazil vs Morocco: பிரேசில் அணியை காப்பாற்றிய வினிசியஸ் ஜூனியர்.. மொராக்கோவுடன் டிரா செய்தது!

கடந்த 2022ஆம் ஆண்டு தனது சொந்த நாட்டில் நடந்த உலகக் கோப்பையில் விளையாடிய கத்தார் அணி, லீக் சுற்றின் அனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்தது. ஆனால், இம்முறை பலம் வாய்ந்த சுவிஸ் அணியை டிரா செய்து, உலகக் கோப்பை வரலாற்றில் தனது முதல் புள்ளியைப் பதிவு செய்து புதிய சாதனை படைத்துள்ளது. கத்தார் அணியின் இந்த ஆட்டம் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net