← முகப்பு இன்றைய ராசிபலன்

Saturn Retrograde 2026: ஜூலை 27 ஆம் தேதி சனி பகவான் மீன ராசியில் வக்ர

🕐 16 Jun 2026 📂 இன்றைய ராசிபலன் 16 பார்வைகள்
Saturn Retrograde 2026: ஜூலை 27 ஆம் தேதி சனி பகவான் மீன ராசியில் வக்ர

Saturn Retrograde 2026: ஜோதிடத்தில் நீதிமான் என்று அழைக்கப்படுபவர் தான் சனி பகவான். இந்த சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தரக்கூடியவர். இவர் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் வரை இருப்பார். தற்போது சனி பகவான் மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் இவர் ஜூலை 27 ஆம் தேதி சனி பகவான் மீன ராசியில் வக்ர பெயர்ச்சி அடையவுள்ளார். இந்த வக்ர நிலையில் சனி பகவான் டிசம்பர் மாதம் வரை இருக்கப்போகிறார்.

பொதுவாக கிரகங்கள் வக்ரமாகும் போது சற்று பலவீனமாக இருக்கும். அதுவும் சனி பகவானின் இந்த வக்ர பெயர்ச்சியால் சில ராசிக்கார்களுக்கு மோசமாக இருந்தாலும், சில ராசிக்காரர்கள் நல்ல அதிர்ஷ்டத்தை பெறவுள்ளனர். குறிப்பாக 4 ராசிக்காரர்களின் கனவு நனவாகப் போகிறது. இப்போது சனி பகவான் வக்ரமாவதால் எந்த ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர் என்பதைக் காண்போம்.

ரிஷபம்

ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டில் சனி பகவான் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். வாழ்வில் பல அம்சங்களில் நல்ல பலன்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக நடக்க வாய்ப்புள்ளது. பணியிடத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். நீண்ட கால கனவு ஒன்று இக்காலத்தில் நிறைவேறும் வாய்ப்புள்ளது.

Saturn Retrograde 2026 People Of These Zodiac Signs Dream Will Come True

மிதுனம்

மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் சனி பகவான் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தடைபட்ட வேலைகள் வெற்றிகரமாக நடக்கும். முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைப்பதால், ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். நல்ல பொருள் வசதிகள் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். சனி பகவானின் அருளால் வசதிகளும், ஆடம்பரங்களும் அதிகரிக்கும் வாய்ப்புக்கள் உள்ளன.

துலாம்

துலாம் ராசியின் 6 ஆவது வீட்டில் சனி பகவான் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். பல வழிகளில் இருந்து நல்ல செய்திகளைப் பெறக்கூடும். திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தம்பதிகளிடையே அன்பும், பிணைப்பும் அதிகரிக்கும். நீண்ட நாள் ஆசை நிறைவேறும்.

Saturn Retrograde 2026 People Of These Zodiac Signs Dream Will Come True

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 5 ஆவது வீட்டில் சனி பகவான் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவார்கள். தாயாரின் ஆரோக்கியம் மேம்படும். இதுவரை நீங்கள் பலவிதமான ஆரோக்கிய பிரச்சனைகளை சந்தித்து வந்தால், அதிலிருந்து விடுதலை கிடைக்கும். சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். பரம்பரை சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் வேலைப்பளு குறையும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net