← முகப்பு செய்திகள்

நடிகர் அதர்வா நடித்துள்ள இதயம் முரளி திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள வாம்மா… வாம்மா பாடல் வெளியீடப்பட்டு

🕐 16 Jun 2026 📂 செய்திகள் 4 பார்வைகள்
நடிகர் அதர்வா நடித்துள்ள இதயம் முரளி திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள வாம்மா… வாம்மா பாடல் வெளியீடப்பட்டு
‘இதயம் முரளி’ திரைப்படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் முரளி மகனான அதர்வா 'பாணா காத்தாடி, பரதேசி, சண்டிவீரன்' போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர். இவர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான ‘பராசக்தி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.

தற்போது, ஆகாஷ் பாஸ்கரின் இயக்கத்தில் ‘இதயம் முரளி’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் அதர்வாவுடன் இணைந்து பிரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், நட்டி நட்ராஜ், ரக்சன், தமன், நிஹாரிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

‘இதயம் முரளி’ படத்தின் டப்பிங் பணிகளை நடிகர் அதர்வா நிறைவு செய்துள்ளதாக படக்குழு சமீபத்தில் வீடியோ வெளியிட்டு அறிவித்திருந்தது. இப்படத்தின் ‘வான் வான்’ பாடலின் படப்பிடிப்பு வீடியோ காட்சிகளை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. இத்திரைப்படத்தின் இதயா,தங்கமே தங்கமே, வான் வான் ஆகிய 3 பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றன.

இந்த நிலையில், ‘வாம்மா… வாம்மா’ பாடலை படக்குழு தற்சமயம் வெளியிட்டுள்ளது. இப்பாடலை நடிகர் தனுஷ் பாடியுள்ளார். இப்படம் வரும் ஜூலை 10ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடதக்கது.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net