Mars Transit In Krithika Nakshatra 2026: ஜோதிடத்தின் படி, நவகிரகங்களின் ராசி மற்றும் நட்சத்திர மாற்றங்கள் மனித வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் நவகிரகங்களில் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாவார் மற்றும் இவர் 45 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார்.
அதோடு அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார். அப்படி செவ்வாயின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். தற்போது செவ்வாய் தனது சொந்த ராசியான மேஷ ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஜூன் 16 ஆம் தேதி செவ்வாய் கிருத்திகை நட்சத்திரத்திற்குள் நுழைகிறார். இந்த நட்சத்திரத்தின் அதிபதி சூரியன்.
ஜோதிடத்தில் சூரியனும், செவ்வாயும் நட்பு கிரகங்களாவர். இந்த நட்சத்திரத்தில் செவ்வாய் ஜூலை 05 ஆம் தேதி வரை இருப்பார். செவ்வாயின் இந்த நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், 4 ராசிக்காரர்கள் இந்த பெயர்ச்சியால் வாழ்வில் திடீர் முன்னேற்றங்கள், புதிய வாய்ப்புக்கள் போன்றவற்றை காணக்கூடும். இப்போது செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்கள் தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். நிதி நிலைமை வலுவடையும். தன்னம்பிக்கை அதிகரிப்பதால் முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கும். புதிய வேலைகளை தொடங்குவதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும்.

சிம்மம்
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களுக்கு ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும். உறவினர்களிடையே உள்ள மனக்கசப்புகள் நீங்கும். கஷ்டங்கள் படிப்படியாக குறையும். குடும்ப மற்றும் திருமண வாழ்வில் சந்தோஷம் அதிகரிக்கும். நீண்ட காலமாக ஒரு விஷயத்திற்கு முடிவெடுக்க முடியாமல் இருந்தால், இக்காலத்தில் ஒரு நல்ல முடிவை எடுப்பீர்கள். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. மன அழுத்தம் குறைந்து மன அமைதி கிடைக்கும். செவ்வாயின் அருளால் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

விருச்சிகம்
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்களின் நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வியாபாரிகளுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். நிதி நிலைமை மேம்படும். புதிய வருமான வழிகள் உருவாகும். பண பிரச்சனைகள் குறையும் வாய்ப்புள்ளது. பணியிடத்தில் உங்களின் முடிவுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். பொறுப்புகள் அதிகரிக்கும். வாழ்வில் ஒவ்வொரு பகுதியிலும் முன்னேற்றத்தைக் காணக்கூடும்.

மீனம்
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் மீன ராசிக்காரர்களின் ஆற்றலும், வலிமையும் அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. புதிய வருமான வழிகள் உருவாகும். நிதி நிலைமை வலுவடையும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். இலக்குகளை அடைவீர்கள். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். சேமிப்பு அதிகரிக்கும். வாழ்க்கையில் முன்னேறி செல்வதற்கான ஊக்கமும், நம்பிக்கையும் மனதில் அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)